Tamil Nadu updates, photo news by Arunan journalist
சாலை புதுப்பித்தல் கோரிக்கை: அதிகாரிகள் மீது கடும் எதிர்ப்பு
## கோவில்பட்டி அதிகாரிகளின் அலட்சியம் குறித்து தூத்துக்குடி லீக்ஸ் விசேஷ செய்தி
தூத்துக்குடி, மார்ச் 14, 2025
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு அலுவலக வளாக சாலையை புதுப்பிக்கக் கோரி தொடர்ந்து எழுப்பப்பட்டு வரும் கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அடுத்த வாரம் புதன்கிழமை (மார்ச் 19) தமிழ்நாடு சட்டமன்றம் முன்பு "அல்வா கொடுக்கும் போராட்டம்" நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அலுவலக வளாக சாலை புதுப்பித்தல் தொடர்பாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்ட போதிலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்களான திரு.சந்தீப் நந்தூரி, திரு.செந்தில் ராஜ் மற்றும் திரு.இளம் பகவத் ஆகியோர் நேரில் பார்வையிட்டும் கூட இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
"திராவிட மாடலுக்கே அல்வா கொடுக்கும் கோவில்பட்டி அதிகாரிகளின் மெத்தன போக்கு ஏற்றுக்கொள்ள முடியாதது," என்று தூத்துக்குடி வடக்கு மாவட்டத் தலைவர் N.P.R தெரிவித்தார்.
அவர் மேலும், "திமுக அரசும், அதிகாரிகளும் பொதுமக்களுக்கு எதிராக செயல்படுவதை கண்டிக்கிறோம்" என்றும் கூறினார்.
போராட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தூத்துக்குடி வடக்கு நகர தலைவர் T.கருப்பசாமி BA.BL உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
சாலை புதுப்பித்தல் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டக்காரர்கள் அரசு அதிகாரிகளுக்கு "அல்வா" வழங்கி தங்களது எதிர்ப்பை தெரிவிக்க திட்டமிட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் தரப்பில், "நாங்கள் தொடர்ந்து போராடியும், மூன்று மாவட்ட ஆட்சியர்கள் மாறியும் கூட எங்கள் பிரச்சனைக்கு தீர்வு காணப்படவில்லை. சாலை புதுப்பித்தல் மிக அவசியமானது, இது குறித்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
சட்டமன்றம் முன்பு நடைபெறவுள்ள இந்த போராட்டம் மிகுந்த கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக