Tamil Nadu updates photo news by Arunan journalist
தூத்துக்குடியில் அரசு திட்டங்கள் விளம்பரப்பிரிவு மூலம் பிரச்சாரம்
தூத்துக்குடி: தமிழக அரசின் சாதனைகள் மற்றும் புதிய திட்டங்களை பொதுமக்கள் இடையே வெளிப்படுத்த மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இன்று14-3-2025 தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில், மக்கள் தொடர்பு அலுவலர் நவீன் பாண்டியன் மேற்பார்வையில், அரசு திட்டங்களை பற்றிய காணொளிகள் டிஜிட்டல் திரை மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பேசிய உரைகள் பொதுமக்களுக்கு காண்பிக்கப்பட்டது.
பெருந்தொகையான மக்கள் திரையில் ஒளிபரப்பான தகவல்களை ஆவலுடன் கண்டு, அரசு வழங்கும் திட்டங்கள் பற்றிய புரிதலை வளர்த்தனர். இந்த முயற்சி, அரசு திட்டங்களை பற்றி மக்களிடம் நேரடியாக கொண்டு செல்ல உதவியதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக