வெள்ளி, 14 மார்ச், 2025

தொழில் நிறுவனங்களுக்கு சைபர் மோசடி எச்சரிக்கை – காவல்துறை அறிவுறுத்தல்

cybercrime.gov.in

தூத்துக்குடி மாவட்டம்: 14.03.2025

தொழில் நிறுவனங்களுக்கு சைபர் மோசடி எச்சரிக்கை – காவல்துறை அறிவுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து பெரிய தொழில் நிறுவனங்களுக்கும், அந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், மாவட்ட காவல்துறை சார்பாக முக்கியமான சைபர் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



சமீபகாலமாக, நிறுவனங்களின் உயர் பதவியிலுள்ள நபர்களின் புகைப்படங்களை பயன்படுத்தி போலி வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மின்னஞ்சல் கணக்குகள் உருவாக்கி, நிறுவன ஊழியர்களை ஏமாற்றி, வங்கி கணக்கு விவரங்கள் உள்ளிட்ட முக்கிய தகவல்களை திரட்டும் மோசடி முயற்சிகள் அதிகரித்துள்ளன. 



இந்த புதிய யுக்தியின் மூலம், குற்றவாளிகள் நிறுவனங்களின் நிதியமைப்பை பாதிக்கும் வகையில் மோசடி செய்ய முயல்கின்றனர்.

இதனை தடுக்கும் வகையில், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, அனைத்து தொழில் நிறுவனங்களும் மற்றும் பணியாளர்களும் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்துகிறது. மேலும், நிறுவனத்தினுள் இத்தகைய சைபர் மோசடி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஊழியர்களை பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது.

மோசடிகளுக்கு இலக்காகும் முன்பு, எந்தவொரு சந்தேகத்திற்கும் உடனடியாக சைபர் குற்ற உதவி எண் 1930-ல் தொடர்புகொண்டு, cybercrime.gov.in இணையதளத்தில் புகார் அளிக்கவும்.

- தூத்துக்குடி மாவட்ட காவல்துறை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக