Tamil Nadu updates,1-3-2025
தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் காவல்துறையின் போதையினால் ஏற்படும் தீங்குகள் குறித்து பேசி விழிப்புணர்வு நிகழ்ச்சி செய்தார்கள்!
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தின் வடபகுதியில், போதைப் பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளை உணர்த்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று 1-3-2025 மாலை 5மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.
தூத்துக்குடி வடபாகம் காவல்துறை உதவி ஆய்வாளர்கள் மகாராஜன், வடிவேலு மற்றும் காவலர்கள் ரத்னகுமார், செல்வமணி, முருகப்பெருமாள் ஆகியோர் இணைந்து இளைஞர்களுக்கு முக்கிய அறிவுரைகளை வழங்கினர்.
"போதைப் பழக்கம் உங்கள் வாழ்க்கையை சீரழிக்கும்! இன்று தீர்மானம் எடுத்தால், நாளைய தினம் உற்சாகமாக வாழலாம்!" என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
பேருந்து நிலைய பயணிகள், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இதில் உறுதியாகப் பங்கேற்று, விழிப்புணர்வை பரப்ப உறுதி கொண்டனர்.
உதவி ஆய்வாளர்களின் பயனுள்ள விழிப்புணர்வு பேச்சு
இன்று போதை எதிர்ப்பு குறித்து தூத்துக்குடி வடபாகம் காவல்துறை உதவி ஆய்வாளர் மகாராஜன் உதவி ஆய்வாளர் வடிவேலு விழிப்புணர்வு பேச்சு,
பஸ் பயணத்திற்காக தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணிகள் மத்தியில் மிகவும் பயனுள்ளதாக தெரிவித்தார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக