வெள்ளி, 21 பிப்ரவரி, 2025

இனி விஷமிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

தூத்துக்குடி: 

சூழ்ச்சி பின்னணி வெளிச்சம்!

Tamil Nadu updates,

Photo news by Arunan journalist 

சென்னை உயர் நீதிமன்றம் (மதுரை கிளை) மகத்தான தீர்ப்பு தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது. 



இந்த தீர்ப்பால் தூத்துக்குடி பொதுமக்கள் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் மகிழ்ச்சி அடைந்தது.

மக்கள் நீதியின் வெற்றியை கொண்டாடும் வகையில், தூத்துக்குடி நகரில் மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைய தலைமுறையினர் உற்சாகமாக கொண்டாடினர்.

ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் எதிர்ப்பு நடவடிக்கைகள்

இத்தீர்ப்புக்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சும்மா இருக்கவில்லை. அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் சென்னை உயர் நீதிமன்ற (மதுரை கிளை) தீர்ப்பை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க வழக்கு தொடர்ந்தனர்.

தோல்வி !!!

 ஆனால், உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் சரியானது என மதிப்பீடு செய்து, மீண்டும் அவர்களுக்குத் தோல்வியளித்தது.


தமிழக அரசு உறுதி!!!

அதன் பின்னரும், ஸ்டெர்லைட் நிர்வாகம் நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தது. ஆனால், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் தமிழக அரசு தொடர்ந்து உறுதியாக எதிர்ப்பு தெரிவித்ததால், மீண்டும் இந்த வழக்கிலும் ஸ்டெர்லைட் நிர்வாகம் தோல்வியை சந்தித்தது.

தற்போதைய சூழ்நிலை மற்றும் அரசின் நடவடிக்கை அவசியம்




சில மாதங்களாக, தூத்துக்குடி மாவட்டத்தை சுற்றியுள்ள சில விஷமிகள் ஸ்டெர்லைட் ஆலை திறக்க வேண்டும் என விளம்பரபடுத்தியும், பணம் செலவழித்து கூலியாட்களை தயார் செய்து பணியாற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதில் வடமாநில தொழிலாளர்களும் அடங்கும்.

விஷமிகள்!!!

இதனால், சாதி, மத கலவரம் போன்ற சமூக அமைதியை பாதிக்கும் சம்பவங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. 

குண்டர் சட்டத்தில் கைது!!!

எனவே, தமிழக அரசும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

 தூத்துக்குடியில் சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக மாற்றும் விஷமிகளை வேடிக்கை பார்க்காமல், உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகிறார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக