இந்திய சுதந்திர போராட்ட வீரர் பாண்டியபதி தேர்மாறன் கல்லறை மீட்புக்குழு - நியாயமான சமூக பிரதிநித்துவத்திற்கான கோரிக்கை
27.02.2025
சென்னை: தமிழ்நாட்டில், இரண்டு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டங்களாக பிரிக்கும் நடவடிக்கையை தமிழக அரசு முன்னெடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், பரதவர் சமூகத்தினருக்கு அரசியல் பிரதிநிதித்துவம் குறைவாக இருப்பதை தீர்க்க வேண்டும் என்று பாண்டியபதி தேர்மாறன் கல்லறை மீட்புக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பான்மையாக பரதவர் சமூகத்தினர் வசிக்கின்ற நிலையில், தமிழக அரசியல் கட்சிகளில் மாவட்ட கழக செயலாளர் பதவிகளில் அவர்கள் இடம் பெறாமல் உள்ளனர். இந்த நிலையை மாற்றும் வகையில், ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம், தூத்துக்குடி மாவட்டத்தில் பரதவர் சமூகத்தினருள் ஒருவரை மாவட்ட கழக செயலாளராக நியமிக்க வேண்டும் என அமைப்பின் இணை அமைப்பாளர் X. இன்னாசி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில்,
"சமூக நீதி மற்றும் சமத்துவ அரசியலை முன்னெடுத்து வரும் திராவிட முன்னேற்றக் கழகம், பரதவர் சமூகத்தினருக்கு அதிகாரப்பூர்வமான பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும். இது அரசியல் கட்சிகளுக்கு நல்ல முன்னுதாரணமாக இருக்கும்." என தெரிவித்துள்ளார்.
இதற்கான அரசு மற்றும் கட்சியின் முடிவு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக