ஞாயிறு, 26 ஜனவரி, 2025

தூத்துக்குடி: அதிமுக மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

தூத்துக்குடி: அதிமுக மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

Tamil Nadu updates,

தூத்துக்குடி, 2025ஜனவரி 26 –

 தமிழகத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக போராடி உயிரை மறந்த மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம், நேற்று (ஜனவரி 25) தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக மாணவர் அணி சார்பில் டூவிபுரம் 5வது தெருவில் நடைபெற்றது.



இதில் மாவட்ட மாணவர் அணி செயலாளர் பில்லா விக்னேஷ் தலைமையில், மாவட்ட அமைப்புச் சாரா ஓட்டுனர் அணி செயலாளரும் முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான இரா. சுதாகர் மற்றும் பல்வேறு நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.


கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன், அதிமுக அமைப்புச் செயலாளர் ராயபுரம் மனோ, கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் கோபி காளிதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு, திமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர்.


நிகழ்வில், அதிமுக நிர்வாகிகள், மகளிர் அணி, எம்ஜிஆர் மன்றம், வழக்கறிஞர் அணி, மண்டல அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகள் தங்களது ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டனர்.


நிகழ்வின் முடிவில், மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளர் அலெக்ஸ்ஜி நன்றி கூறினார்.

 முன்னதாக, மொழிப்போர் தியாகிகளின் படத்திற்கு அதிமுகவினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக