ஞாயிறு, 26 ஜனவரி, 2025

குடியரசு தின விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி சூளுரை

தூத்துக்குடி மக்களின் எதிர்பார்ப்பை முழுமையாக நிறைவேற்றுவோம் - குடியரசு தின விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி சூளுரை

Tamil Nadu updates, photo news by sunmugasuthram Reporter 

தூத்துக்குடி ஜனவரி 26: 

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் 76-வது குடியரசு தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், நகர அமைப்பு திட்ட செயற்பொறியாளர் ரங்கநாதன் வரவேற்புரையாற்றினார்.


 மேயர் ஜெகன் பெரியசாமி தேசிய கொடியேற்றி, ஆரஞ்சு மிட்டாய் வழங்கினார்.




2024-25ம் ஆண்டில், அலுவலக பணியில் சிறப்பாக செயல்பட்ட நிரந்தர மற்றும் தற்காலிக ஓப்பந்தபணியாளர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 





அதோடு, தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு குறித்த கோலமிடும் பணிகளை சிறப்பாக செய்த நகர்புற வாழ்வாதார மைய பணியாளர்களுக்கு 40 பேருக்கும் நற்சான்றிதழ் வழங்கப்பட்டன.


நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில்,...

 "வெள்ளைக்காரனை எதிர்த்து சுதந்திரம் அடைந்தோம். தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி, கடந்த கால மழை பாதிப்புகளை சரி செய்யும் பணியில் ஒத்துழைப்பு வழங்கினோம். கடந்த மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்  இரவு பகலாக பணியாற்றினோம். அரசின் திட்டங்களை எப்போதும் மக்களுக்கு மிகுந்த நன்மைகள் தரும் வகையில் செயல்படுத்துகிறோம்" என்றார்.


மேலும், "மாநகரத்தில் தற்போது 7 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். புதிய பூங்காக்கள், சாலைகள், மற்றும் ஏராளமான திட்டங்கள் சீராக செயல்படுத்தப்படுகின்றன. காலையில் தொடங்கி மாலை வரை, மக்கள் அனைவரும் ஆரோக்கியமான சூழலில் வாழ உதவுகிறோம். பொதுமக்கள் தங்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்துக் கொள்வது முக்கியம்" என்றார்.


மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் விழாவில் பங்கேற்றனர். 



அனைத்து சாலை மேம்பாடுகள், பள்ளிகள், புத்தகக் கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைத் திட்டங்களை முன்னெடுத்து, மக்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் பணிகளை விரைவில் நிறைவேற்றுவதாக மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி அளித்தார்.




பங்கேற்றவர்கள்: மாநகராட்சி அதிகாரிகள், மண்டலத் தலைவர்கள், திமுக கவுன்சிலர்கள், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கவுன்சிலர்களுடன் கூடுதலாக, பல சமூக சேவகர் மற்றும் உதவி ஆணையர்கள் இவ்விழாவில் பங்கேற்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக