தூத்துக்குடி: கடற்கரை மீனவர்களின் வலைகள் தீக்கிரை – 4 லட்சம் ரூபாய் நஷ்டம்
Tamil Nadu updates,
தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளம் கடற்கரையில் உள்ள புனித சந்தியாகப்பர் ஆலயத்திற்கு அருகிலுள்ள மீனவர் வாழ்வாதார இடமான வலை பின்னும் மற்றும் பழுது பார்க்கும் கட்டிடத்தில் கடந்த 26.01.2025 அன்று பரபரப்பான சம்பவம்
இன்று மதியம் 3 மணியளவில், பிரான்சிஸ், சேசு ராஜா, மாணிக்கம், சதீஷ், பிரகாஷ், சேவியர் ஆகிய மீனவர்கள், அவர்கள் பிடித்த வாவல் மீன், கனவா மீன், முரல் மீன் வலைகளை வைக்க வைத்து வலைப்பின்னும் கூடத்தில் இருந்தபோது, எதாவது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அந்த வலைகளுக்கு தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.
இந்த தீக்கிரையில் பாதிக்கப்பட்ட வலைகளின் மதிப்பு சுமார் 4 லட்சம் ரூபாயாக மதிக்கப்படுகிறது. சம்பவம் பற்றி தகவல் அறிந்த மீனவர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள், அனைத்து வலைகளும் முழுவதும் எரிந்து நாசமாகின.
இந்த சம்பவம் மீனவர்களுக்கு மிகுந்த மனக்கவலையும், நஷ்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மீனவர்கள் தங்களுடைய உயிராதாரமான வலைகளை இழந்து கவலை கொண்டுள்ளனர்.
இந்தத் தகவல் தொடர்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருகின்றது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக