வெள்ளி, 24 ஜனவரி, 2025

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் சமது எம்.எல்.ஏ. தூத்துக்குடி மாவட்டம் வருகை

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் சமது எம் எல் ஏ தூத்துக்குடி மாவட்டம் வருகை

TamilNadu updates

Photo news by Arunan journalist 



தூத்துக்குடி, ஜனவரி 24:

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர், சகோதரர் அப்துல் சமது 

 18-ம் தேதி, பல்வேறு நிகழ்வுகளுக்காக தூத்துக்குடி மாவட்டம் வருகை தந்தார்.



அவரை, தூத்துக்குடி சுங்க சாவடி முன்பாக, மாவட்டத் தலைவர் அகமது இக்பால் அவர்கள் வரவேற்றார். பின்னர், முத்தையாபுரம் பள்ளிவாசலில் ஜமாத் நிர்வாகி அப்பாஸ் தலைமையில், ஜமாத் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு, மனு சமர்ப்பிக்கப்பட்டது.



இந்த நிகழ்வில் மாநிலத் துணைத் தலைவர் பி. எஸ். அமீது, மாவட்ட செயலாளர் அஸ்மத், மாவட்ட துணைத் தலைவர் ஜனோபர் அலி, தமுமுக மாநகர தலைவர் அப்துல் சமது மற்றும் பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். 




அதன் பின், காயல்பட்டினம் PGR ஹோட்டலில் மாவட்ட பொருளாளர் ஐதுரூஸ் மற்றும் நகர நிர்வாகிகள் அவர்களை வரவேற்றனர்.



குலசை மற்றும் மானங்காத்தானில் நிகழ்ச்சிகள்

ஜனவரி 19:

மாணப்பாறை சட்டமன்ற தொகுதி செயலாளர், மனிதநேய மக்கள் கட்சியின் கொடியேற்றம் மானங்காத்தானில் நடைபெற்றது.




 அதன்பின்னர், ஆத்திகுளம் பகுதியில் மீட்க்கப்பட்ட தர்காவை பார்வையிட்டனர். கயத்தாரில், நகர தலைவர் சையத் அலி, வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்.



மேலும், கயத்தார் பேருந்து நிலையம் அருகில், மனிதநேய மக்கள் கட்சியின் கொடியினை பொதுச் செயலாளர் அப்துல் சமது ஏற்றியபோது, முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 



அதன் பிறகு, மகளிர் பேரவை பெண்கள் இணைப்பு கூட்டம் மற்றும் மாவட்ட நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது.


இனிமேலும் முக்கிய நிகழ்வுகள்

கோவில்பட்டி ஆய்வரங்கத்தில் மாற்றுக் கட்சியினர் மனிதநேய மக்கள் கட்சியில் இணைந்தனர். பின்னர், பத்திரிகையாளர் சந்திப்பும், அரசு ஊழியர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.


இந்த நிகழ்வில், தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் பல முக்கிய தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள், மற்றும் மாநகர நிர்வாகிகள் பங்குகொண்டனர்.


– H.M. அகமது இக்பால்

தமுமுக, தூத்துக்குடி மாவட்டத் தலைவர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக