தூத்துக்குடி மாவட்டம் சேர்வைக்காரன் மடம் ஊராட்சி பகுதியில் ஆக்ரமிப்புகள் அகற்ற வேண்டும் பெருந்தலைவர் மக்கள் கட்சி கோரிக்கை
Tamil Nadu updates,
Photo news by Kannan
kalai deepam daily editor
இது பற்றிய செய்தியாவது:-
ஜனவரி 26
தூத்துக்குடி மாவட்டம் சேர்வைக்காரன் மடம் ஊராட்சி பகுதியில் குடியரசு தின விழா முன்னிட்டு நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில், பொதுமக்கள் மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.பி. மாரியப்பன், யோபு சாலமன் ஆகியோர் தலைமையில்,, ஆக்ரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி மனு அளித்தனர்.
இதன் முக்கிய கோரிக்கைகள்:
1. குப்பை கழிவுகள்
: ஊராட்சியில் நிலப்பரப்புகளின் மீது குப்பைகள் மற்றும் கழிவுகளை பொது நீர்நிலைகளில் தள்ளும் சூழ்நிலையை தடுப்பதற்காக, தனி அலுவலர் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குப்பை கழிவுகளை தவறான இடங்களில் குவிக்காமல், ஒதுக்கப்பட்ட இடங்களில் குப்பை கழிவுகளை கொட்ட வேண்டும்.
2. காமாராஜர் சிலை அருகே ஆக்ரமிப்புகள் அகற்றுக!!!
கடந்த 5 ஆண்டுகளாக, காமாராஜர் சிலை அருகே கார்கள் மற்றும் வாகனங்களை நிறுத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆக்ரமிப்பு கள் ஏற்படுத்தி வருகின்றனர்
காமாராஜர் சிலை முன்பு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த மனு குறித்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க மேற்கொண்டனர்.
கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் மாரியம்மாள் முன்னிலை வகித்து, பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாவட்ட பொருளாளர் தேவராஜ் மற்றும் இளைஞரணி செயலாளர் ரஞ்சித் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அதிகாரிகள் இந்த கோரிக்கைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக