வியாழன், 23 ஜனவரி, 2025

தூத்துக்குடியில் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நாளை நடைபெறுகிறது – அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை

Tamil Nadu updates,24-1-2025

Photo news by sunmugasuthram Reporter 

தூத்துக்குடியில் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நாளை நடைபெறுகிறது – அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை



தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தமிழ்நாட்டில் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் தினமான ஜனவரி 25ஆம் நாள், ஒவ்வொரு ஆண்டும் மொழிப்போர் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.


அரசு வழிகாட்டியுள்ள விதத்தில், தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் உயிர் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தலைமைகழகம் உத்தரவிற்கிணங்க, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகில் பொதுக்கூட்டம் நடைபெறும்.


இவ்வுக்கூட்டத்தில், மாணவரணி மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில், மாநில அளவிலான தலைவர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள். இதில், மாவட்ட, ஒன்றிய, பகுதி, நகர, பேரூராட்சி மற்றும் வட்ட, ஊராட்சி கிளை கழக நிர்வாகிகள், மாணவர் அணி நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு தியாகிகளுக்கு மரியாதை செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார் அமைச்சர் கீதாஜீவன்.


அதற்கான அனைத்து முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக