Tamil Nadu updates,
24-12-2024
Photo news by Arunan journalist
அதிமுக நிறுவனர் புரட்சி தலைவர் எம்ஜிஆர் 37வது ஆண்டு நினைவு தினம்
தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் தலைமையில் அதிமுக வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இது பற்றிய செய்தியாவது:-
அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் 37வது ஆண்டு நினைவு தினம்: தூத்துக்குடியில் மரியாதை நிகழ்வு
அதிமுக நிறுவனரும், மறைந்த இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 37வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, இன்று (24.12.2024) செவ்வாய்க்கிழமை தூத்துக்குடியில் நினைவு நிகழ்வுகள் நடைபெற்றன.
🔥 தீபம் ஏற்றி பத்தி கொளுத்தி மறைந்த தலைவர் எம்ஜிஆர் அவருக்கு ஆராதனை செய்தனர் காய்கனிகள் படைக்கப்பட்டது |
காலை 9.30 மணிக்கு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகம் சார்பில் மாவட்டக் கழக அலுவலகம் முன்பும், பின்னர் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பும் அமைந்துள்ள எம்ஜிஆர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் தலைமையேற்று, ரோஜா பூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
உடன் கழக நிர்வாகிகள், கட்சியினர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் கழக அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, தூத்துக்குடி தெற்குமாவட்ட அவைத்தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல், கழக அமைப்புசாரா ஓட்டுநர் அணி இணை செயலாளர் பெருமாள்சாமி, கழக வழக்கறிஞர் அணி துணை செயலாளரும், தமிழ்நாடு, புதுச்சேரி பார்கவுன்சில் உறுப்பினருமான வழக்கறிஞர் பிரபு, முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளருமான இரா.சுதாகர், தூத்துக்குடி பகுதி கழக செயலாளர்கள் முருகன், ஜெய்கணேஷ்,நட்டார் முத்து, முன்னாள் மாநகராட்சி துணை மேயர், கிழக்கு பகுதி கழக செயலாளர் சேவியர், பகுதி கழக பொறுப்பாளர்கள் சுடலைமணி, செண்பக செல்வன், முன்னாள் மேயரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட மகளிரணி தலைவருமான அந்தோணி கிரேசி, ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவரும், மாவட்ட கழக துணைச்செயலாளருமான வசந்தா, தூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் விஜயகுமார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எம்.பெருமாள், இணை செயலாளர் சத்யா இலட்சுமணன், துணைச் செயலாளர் கே.மிக்கேல், ஆழ்வை கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக் ராஜா, தூத்துக்குடி தெற்குமாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ், தூத்துக்குடி தெற்கு
மாவட்ட சிறுபான்மையினர் நலப் பிரிவு செயலாளர் கே.ஜே பிரபாகர்,
மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஜெ.தனராஜ், தூத்துக்குடி தெற்குமாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அருண் ஜெபக்குமார், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாவட்ட மகளிரணி செயலாளர் ஜூலியட், ஒன்றியஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் காசிராஜன், ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான அழகேசன் மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர்கள்எஸ்.கே.மாரியப்பன், மனுவேல்ராஜ், திருச்சிற்றம்பலம கழகபொதுக்குழு உறுப்பினர் அய்யாதுரை பாண்டியன், தூத்துக்குடி மாவட்ட மண்டல அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு செயலாளர் கல்வி குமார், லட்சுமணன் பொன்னம்பலம்,ரயில்வே மாரியப்பன், ஸ்பிக் கந்தசாமி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட அண்ணா ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் நிலாசந்திரன், மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர்கள் ஆண்ட்ரு மணி, சுகந்தன் ஆதித்தன், சரவண பெருமாள், பிள்ளைநாயகம், முனியசாமி , தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைசெயலாளர் சகாயராஜ், கே.கே.பி. விஜயன் ஹார்பர் பாண்டி, வர்த்தக அணி பொருளாளர் சுகுமார், தலைமைக் கழக பேச்சாளர் முருகானந்தம், தூத்துக்குடி மணிகண்டன், கொம்பையா, உலகநாத பெருமாள் சந்தனப்பட்டு, சொக்கலிங்கம், எம்.டி. ராஜா, இளைஞர் பாசறை முள்ளக்காடு ஸ்ரீராம், முன்னாள் மாவட்ட பிரதிநிதி சேவியர் ராஜ், மாவட்ட அணி ஜான்சன் தேவராஜ், மகளிர் அணி நிர்வாகிகள் மெஜூலா, சண்முகத்தாய், இந்திரா, அன்ன பாக்கியம், ஷாலினி, சரோஜா, சாந்தி, மற்றும் பால ஜெயம் சாம்ராஜ் ஆனந்த் உதயா உள்ளிட்ட அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் புரட்சி தலைவர் எம்ஜிஆரின் நினைவுகளைப் பகிர்ந்து பலரும் உரையாற்றினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக