செவ்வாய், 24 செப்டம்பர், 2024

தூத்துக்குடி மாவட்டத்திலும் இவர்களை குறி வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

தூத்துக்குடி மாவட்டத்தில் கார் லாரி பஸ் ஆட்டோ ஓட்டுநர்கள் வாகனங்கள் பெருக்கம் அதிகமாக இருக்கிறது 


 தமிழக அரசு தடை செய்யப்பட்ட கணேஷ் புகையிலை கெய்னி  மற்றும் பான் பராக்கு பாக்கு (திருட்டு தனமாக விற்பவர்கள் இடம் அதிக விலை கொடுத்து வாங்கி )போடுவதும்  பலர் அதற்கு அடிமையாகி யுள்ளார் கள்

கடந்த காலங்களை விட அதிகமாகி வருகின்றன.

 வாய் கேன்சர் நோய்க்கு ஆளாகி வருகின்றனர்.

கஞ்சா போன்ற போதை வஸ்துக்கள் பயன் படுத்தி வருவதும் கவலையளிக்கும் விஷயமாக பார்க்க படுகிறது 

"போதை கவன குறைவை ஏற்படுத்தும் விபத்து நேரிடலாம்!!!!!"

தூத்துக்குடி மாவட்டத்திலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



 இன்று24-9-2024 விருதுநகர் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் விருதுநகர் ஊரக காவல் சரக சத்திரரெட்டியப்பட்டி சோதனை சாவடி அருகிலும், விருதுநகர் மேற்கு காவல் நிலைய சரக நான்கு வழி சாலை சிவகாசி சர்வீஸ் ரோட்டிலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை சம்பந்தமாக தணிக்கை செய்ததில் மேற்படி நபர்களிடமிருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது

 

 புகையிலை  பொருட்களை வைத்திருந்த நபர்களுக்கு தலா ரூபாய்25,000/  விதிக்கப்பட்டு மொத்தம் ரூபாய் 50,000 + 1000 = 51,000ஆன்லைன் மூலம் அபராத தொகை செலுத்தப்பட்டது


அன்பான வேண்டுகோள்!!! அனைத்து ஒட்டுநர்களுக்கும் நண்பர்களே சமீபகாலமாக இது போல் நடவடிக்கை நடந்து கொண்டிருக்கிறது.

 அனைவரும் கவனத்துடன் செயல் படவும் உங்களை நம்பி உங்களது குடும்பம் இருக்கிறது 


இது போல் செயல் பட்டால் உங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என சமூக அக்கறை உடன்

கோவை ஜாகிர் என்பவர் இன்று விழிப்புணர்வு பதிவு செய்து உள்ளார் இவரது சமூக அக்கறை  பதிவை பார்த்து பலரின் பாராட்டுக்கள் வைரல் விழிப்புணர்வு தந்துள்ளது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக