ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2024

2026 ல் ஸ்டாலினா? எடப்பாடியாரா?விடியா திமுக ஆட்சியில் நாள் தோறும் நடைபெறும் கொலை கொள்ளை, போதைப் பொருள் விற்பனை ,சொத்து வரி உயர்வு மின்சார கட்டண உயர்வு என மக்களை வாட்டி வதைக்கும் இந்த விடியா திமுக அரசின் பொம்மை முதல்வர் ஸ்டாலின் ஆட்சியையும் மக்கள் பார்த்து விட்டனர் #முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் பரபரப்பு


தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதி கழக நிர்வாகிகளுக்கு புதுப்பித்த டிஜிட்டல் வடிவிலான அடையாள அட்டைகளை 

தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன்

வழங்கினார்




அப்போது முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் பேசியதாவது 


நடந்து முடிந்தது நாடாளுமன்ற தேர்தல் இதில் மத்தியில் மோடி ஆட்சி வர வேண்டுமா வேண்டாமா என மக்கள் வாக்களித்தனர். 


நாடாளுமன்ற தேர்தலுக்கு மக்கள் ஒரு விதமாக வாக்களிப்பார்கள் சட்டமன்ற தேர்தலுக்கு ஒருவிதமாக வாக்களிப்பார்கள் .நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் அளித்த வாக்குகள் திமுக விற்கு அளித்த வாக்குகள் இல்லை தமிழகத்தில் மோடிக்கு எதிரான வாக்குகள் தான் அவை . 


வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலினா? எடப்பாடியாரா? என்று தான் மக்கள் வாக்களிப்பார்கள்.இந்த விடியா திமுக ஆட்சியில் நாள் தோறும் நடைபெறும் கொலை கொள்ளை, போதைப் பொருள் விற்பனை ,சொத்து வரி உயர்வு மின்சார கட்டண உயர்வு என மக்களை வாட்டி வதைக்கும் இந்த விடியா திமுக அரசின் பொம்மை முதல்வர் ஸ்டாலின் ஆட்சியையும் மக்கள் பார்த்து விட்டனர்,



 கடந்த எடப்பாடியாரின் ஆட்சியையும் மக்கள் பார்த்து விட்டனர் வரும் தேர்தலில் இந்த விடியா திமுக அரசை வீட்டிற்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டனர் எனவே நாம் அனைவரும் இந்த விடியா திமுக அரசின் மக்கள் விரோத போக்கு, சொத்து வரி, மின்சார கட்டண உயர்வு உயர்வு, உள்ளிட்டவைகள் மற்றும் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் செயல்படுத்திய நலத்திட்டங்களை   

 மகளிர் அணியிணர், பிற சார்பு அணியிணர் வீடுகள் தோறும் நேரடியாக மக்களை சந்தித்து எடுத்து கூற வேண்டும் என்றார்.


தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதி கழக நிர்வாகிகள் மற்றும் புதிய உறுப்பினர்களுக்கு டிஜிட்டல் வடிவிலான அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி நீதிமன்றம் எதிரே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது. 


இதில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறு பகுதி செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் , மற்றும் அதிமுகவில் இணைந்த புதிய உறுப்பினர்களுக்கு டிஜிட்டல் வடிவிலான அடையாள அட்டையை தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் வழங்கினார்.


 இந்நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர் என். சின்னத்துரை, மாவட்ட கழக அவைத் தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளருமான இரா. சுதாகர்,மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள்சாமி, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் இரா. ஹென்றி, பகுதி கழக செயலாளர்கள் முன்னாள் துணை மேயர் சேவியர், முருகன், ஜெய்கணேஷ், பொறுப்பாளர்கள் செண்பகச் செல்வன், சுடலைமணி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எம்.பெருமாள், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக். ராஜா, மாவட்ட மாணவர் அணி செயலாளர் பில்லா விக்னேஷ், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் கே.ஜே. பிரபாகர், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஜெ.தனராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அருண் ஜெபக்குமார், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர்கள் சத்ய லட்சுமணன், முருகன், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் மனுவேல்ராஜ், வழக்கறிஞர்கள் சுகந்தன் ஆதித்தன், முனியசாமி, சரவணப் பெருமாள், உதயகுமார், அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு மண்டல செயலாளர் கல்வி குமார், இணைச்செயலாளர் லட்சுமணன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் டைகர் சிவா, எஸ் கே மாரியப்பன், மாவட்ட அண்ணா ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் நிலா சந்திரன், தலைமைக் கழக பேச்சாளர் முருகானந்தம், மகளிர் அணி நிர்வாகிகள் ராஜேஸ்வரி, சண்முகத்தாய், மாநகராட்சி கவுன்சிலர் வெற்றி செல்வன், கே.என்.ஆனந்தராஜ், பரிபூரண ராஜா, வெங்கடேஷ், கே.கே.பி. விஜயன் ஹார்பர் பாண்டி, ஜவஹர்,ஸ்ரீராம், வசந்த், வட்டக் கழக செயலாளர்கள் கொம்பையா, சொக்கலிங்கம், தூத்துக்குடி மணிகண்டன், சுப்பிரமணி, மகாராஜா, டேவிட் ஏசுவடியான், சுயம்பு, சங்கர், கிளாமன்ஸ், சந்திரசேகர், பாக்கியராஜ், ஜெரால்டு, மணி கணேஷ், பாம்பு கோவில் முருகன், அருண் ஜெயக்குமார், மணிவண்ணன் பொன்சிங் தர்மராஜ், வின்ஸ்டன் அண்டோ, ரகுநாதன், மனோகர், பூக்கடை எஸ் என் வேலூ, அந்தோணி ராஜ், ஜெயக்குமார் எம் கே சி ஈஸ்வரன், எஸ் பி பிரபாகரன், டைமன் ராஜ், பூர்ண சந்திரன், செல்வராஜ், மாடசாமி, மாரிமுத்து யோவான், முன்னாள் கவுன்சிலர் தமிழரசி, அன்னதாய் முத்துலட்சுமி, அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு அருணாச்சலம், மாரியப்பன், பாலசுப்பிரமணியன், பொன்னம்பலம், அன்பரசு பிரபாகர் மற்றும் பாலஜெயம், சாம்ராஜ் உள்ளிட்ட பெருந்திரளான கழகத்தினர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக