வியாழன், 9 மே, 2024

அதிமுக கோடை கால குடிநீர் பந்தல் தூக்கி எறிந்த தூத்துக்குடி மாநகராட்சி முன்னாள் அமைச்சர் களுக்கு கெளரவ குறைச்சல் முக்குடைப்பு இதனால்?

அருணன் செய்தியாளர்: 

தூத்துக்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கள் சித செல்லப்பாண்டியன் எஸ்பி சண்முகநாதன் இருவரும் திறந்து கோடைக்கால குடிநீர் பந்தல் இரண்டு நாளில் தூத்துக்குடி மாநகராட்சி ஆக்ரமிப்பு என்று கடாசி தள்ளினர்.

இதனால் அப்செட் ஆன அதிமுக முன்னாள் அமைச்சர் கள். திமுக விடம் முக்குடைந்து போயுள்ளனர் 

அதற்காக வே...

மீண்டும் அதிமுக கோடை கால தண்ணீர் பந்தல் இன்று திறப்பு 


இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடியில் கடந்த மே 1 தினம் (1-5-2024) முன்னிட்டு  அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சித செல்லப்பாண்டியன் ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் தூத்துக்குடி புதிய மாநகராட்சி நுழைவு வாயில் பகுதியில் கோடைக்கால குடிநீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது


மறுநாளே...அனுமதி மறுப்பு மற்றும் ஆக்ரமிப்பு என கடாசி தள்ளினர்.

தூத்துக்குடி மாநகராட்சி யால் ஆக்கிரமிப்பு என தூக்கி எறியப்பட்ட கோடைக்கால குடிநீர் பந்தல்!!!


 தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் சுற்றி ஆக்ரமிப்பு அகற்றுவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது


 இந்நிலையில்  அதிமுக முன்னாள் அமைச்சர் கள் சித செல்லப்பாண்டியன் எஸ்பி சண்முக நாதன் ஆகியோர் திறந்து வைத்த கோடைக்கால நீர் பந்தலை விட்டு வைக்குமா ? ஆக்ரமிப்பு அகற்றப்பட்டது.


இச் சம்பவம்...

அதிமுக முன்னாள் அமைச்சர் களுக்கு கெளரவ மேட்டராக பார்க்க ப்பட்டது. 

நேற்று திறந்த அதிமுக முன்னாள் அமைச்சர் கள் திறந்த குடிநீர் பந்தல் இன்று காணாததால் தூத்துக்குடி பொதுமக்கள் "ஙே" என பார்த்தார்கள் 

அதிமுக வுக்கு கெளரவ குறைச்சல் வந்தது .

இதனால்...

 தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் பகுதிக்கு அருகில் ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் இன்று 9-5-2024 புதியதாக கோடை கால குடிநீர் பந்தல் முன்னாள் அமைச்சர் சித செல்லப்பாண்டியன் திறந்து வைத்து நீர் மோர் வழங்கினார்.

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு இன்று 9-5-2024 குடிநீர் பந்தல் திறப்பு 


 ஆனால் இந்த தடவை முன்னாள் அமைச்சர் எஸ்பி சண்முகநாதன் உடன் வரவில்லை ஏனோ மிஸ்ஸிங் 

இதுவாவது தூத்துக்குடி மாநகராட்சி யில் அனுமதி பெறப்பட்டதா ??? இல்லையா!! கேட்குகிறார்கள் 

சாதாரண தண்ணீர் பந்தல் விஷயத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கள் சித செல்லப்பாண்டியன் எஸ்பி சண்முகநாதன் ஆகியோர் திமுக விடம் முக்குடைந்து போயுள்ளார்கள் என்னத்த சொல்ல என்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக