புதன், 29 மே, 2024

தூத்துக்குடியில் செய்தியாளர்களை பார்த்து ஒட்டமெடுத்த எடப்பாடியார்!!!

 ▂▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

30-5-2024

செய்தி புகைப்படங்கள் 

ரோஜா அருணன்  


தூத்துக்குடியில் விமான நிலையத்தில் செய்தியாளர்களை பார்த்ததும் பிரஸ் மீட் தராமல் ஒட்டமெடுத்து தவிர்த்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 




இதுபற்றி செய்தியாவது:-


தூத்துக்குடியில் வாகை குளம் விமான நிலையத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வந்து இறங்கினார் 


அரசியல் களத்தில் சூட்டை கிளப்பும் அதிமுக தலைவி ஜெயலலிதா இந்துத்துவ தலைவர் என தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணா மலை பேசியிருந்தார் 

அதற்கு பல தரப்பட்ட விமர்சனங்கள் சர்ச்சை ஏற்பட்டது இந்நிலையில் அதே வலியுறுத்தி முன்னாள் கவர்னர் பாஜக தமிழிசை செளந்தரராஜன் நேற்று ஜெயலலிதா இந்துத்துவ தலைவர் தான் இதை யாராலும் மறுக்க முடியாது என வெடித்து இருந்தார்.


தமிழகத்தை பொறுத்தவரை திமுக அதிமுக மட்டுமல்ல புதிய கட்சிகள் கூட திராவிட அரசியல் மதசார்பற்ற தன்மை கடைபிடித்து வருகின்றனர் 

பாஜக தலைவர்கள் அண்ணா மலை தொடர்ந்து தமிழிசை செளந்தரராஜன் அதிமுக கட்சி தலைவி ஜெயலலிதா இந்துத்துவ தலைவர் தான் என கூறுகிறார் கள்


இதற்கு பதிலடியாக கருத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம்  வரவில்லை 

இதுவரை வாய் திறக்கவில்லை அமைதியாக இருந்து வருகிறார் 




இது குறித்து எடப்பாடியார் இடம் கருத்து கேட்க செய்தியாளர்கள் அலை மோதி வந்தது 


நேற்று29-5-2024 அதிமுக தென்காசி முன்னாள் எம்பி வசந்தி முருகேசன் குடும்ப திருமண த்தில் கலந்து கொள்ள ...

சென்னை யில் இருந்து தூத்துக்குடி விமான நிலையம் வந்து இறங்கினார் 


தயாராக செய்தியாளர்கள் காத்து கிடந்தனர் 

நுழைவு வாயில் இருந்து உடனே காரில் ஏறி பறந்து சென்று விட்டார் .

உடன் 

அதிமுக முன்னாள் அமைச்சர் கள் உதயகுமார், கடம்பூர் ராஜு சண்முகநாதன் செல்லப்பாண்டியன் மற்றும் இன்பதுரை ஆகியோர் உடன் அதிமுக கட்சி தொண்டர்கள் கூட்டம் ஏர்போர்ட் நிரம்பியது





மாலையில்...

திருமணம் முடிந்து திரும்ப கட்சி யினர் புடை சூழ அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி ஏர்போர்ட் வரும் வரை இந்துத்துவ தலைவி பற்றி கேள்விகள் கேட்க வேண்டும் ??என செய்தியாளர்கள் காத்திருந்தார் கள்!!!!

அவர் வந்ததும் 

செய்தி யாளர் கள் ஒடி போய் சார்... சார் பிரஸ் மீட் என ரொம்ப கெஞ்சியும் கேட்காமல் தவிர்த்து காரில் இருந்து இறங்கி படுவேகமாக விமான நிலையத்தில் உள்ளே சென்று விட்டார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக