▂▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒 𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂
photo news Arunan
போதை பொருள் கடத்தல் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் இன்று 4 - 3-2024 தமிழக முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இது பற்றிய செய்தியாவது:-
திமுக ஆட்சியில் தமிழ்நாடு போதைப் பொருட்களின் கேந்திரமாக மாறி உள்ளதற்கும், போதை பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழகத்திற்கு பெரும் தலைகுனிவு ஏற்பட்டுள்ளதற்கும் காரணமான திமுக அரசை கண்டித்தும்
அதிமுக பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் தலைமையில் மாவட்ட தலைநகரங்களில் இன்று 04.03.2024 அதிமுகவினர் கண்டன ஆர்ப்பார்ட்டத்தில் ஈடுபட்டார்கள்.
தூத்துக்குடியில் வடக்கு தெற்கு மாவட்டம் அதிமுக சார்பாக இன்று காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் அருகே உள்ள எம்.ஜி.ஆர் திடலில் வைத்து கண்டன ஆர்ப்பாட்டம்.
தூத்துக்குடி தெற்கு வடக்கு மாவட்ட கழகம் சார்பில் மாவட்ட கழக செயலாளர்கள் முன்னாள் அமைச்சர்கள்
எஸ்.பி.சண்முகநாதன் மற்றும் கடம்பூர் செ.ராஜு எம்எல்ஏ ஆகியோர் தலைமையில்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக