சனி, 2 மார்ச், 2024

முதல்வர் பார்க்க அழைத்து சென்ற கனிமொழி எம்.பி. ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பு!!! மக்கள் கண்காணிப்பகம் பாராட்டு மற்றும் சிறப்பு புலனாய்வு குற்றவிசாரனை இதுவரை முதல்வர் ஏன் முன்வரவில்லை என வினவல்!!!

t░h░o░o░t░h░u░k░u░d░i░l░e░a░k░s░

photo news by arunan journalist

இன்று 2-3 - 2024 தமிழக முதல்வர் ஸ்டாலின் பார்க்க அழைத்து சென்ற கனிமொழி எம்.பி.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் முதல்வர் ஸ்டாலினுக்கு தங்கள் நன்றி தெரிவித்தனர்.

இந்நிகழ்வுக்கு மக்கள் கண்காணிப்பகம் பாராட்டு தெரிவிக்கிறது.


அதே வேளையில் சி.பி.ஐ.

யிடம் உள்ள குற்றவியல் விசாரணையை வேறொரு சிறப்புப்

புலனாய்வு குழுவிடம் அளிக்க முதல்வர் இதுவரை ஏன் ? முன்வர வில்லை என வினவியுள்ளது.

இன்று 2 -3-2024 முதல்வர் ஸ்டாலின் அவரை சந்தித்து நன்றி தெரிவித்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர்....உடன் கனிமெ
மொழி எம்.பி.

இதுபற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நாசகார ஆலைக்கு எதிராகப்

போராடிய அனைத்து எதிர்ப்பு இயக்கங்களின் பிரதிநிதிகளை,

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு மு. க. கனிமொழி

அவர்களின் முயற்சியால், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்

மு. க. ஸ்டாலின் அவரை சந்திக்கவிருப்பதைப்

மக்கள் கண்காணிப்பகம் பாராட்டுகிறது...!



ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்திற்கான வெற்றி என்பது, தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்களின்

வாதத்தால் கிடைத்த வெற்றி மட்டும் அல்ல, மாறாக அரசு வழக்கறிஞர்களுக்கு பக்கபலமாக

சட்ட ரீதியாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம், சென்னை உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் எதிர்ப்பு

இயக்கங்களின் பல்வேறு வழக்கறிஞர்களின் தலையீடும் இவ்வெற்றிக்கு வலு சேர்த்தது.



மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே,

துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட 16 குடும்பத்தினருக்கு

நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கைக்குப் பிறகு, தாங்களாக முன்வந்து சி.பி.ஐ.

யிடம் உள்ள குற்றவியல் விசாரணையை வேறொரு சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் ஏன் ?

இதுவரை அளிக்க முன்வரவில்லை என்று தங்களைச் சந்திக்கும் மக்கள் இயக்கங்களின்

பிரதிநிதிகளிடம் விளக்கம் அளிப்பீர்களா?"

இவ்வாறு தெரிவித்துள்ளது.

MAR

02/2024

People's Watch

32, Besant Road, Chokkikulam, Madurai - 625 002

+91 452 2531874 +91 452 2539520 +91 99943 68500

ஹென்றி திபேன்

மக்கள் கண்காணிப்பகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக