வியாழன், 16 நவம்பர், 2023

கனிமொழி எம்பி உயிருடன் மீன் குஞ்சுகளை தாமிரபரணி ஆற்றில் விட்டார் ஆற்றில் மீன் குஞ்சுகள் குஷியில் துள்ளி குதித்து சென்றது

thoothukudileaks 16-11-2023

Arunan journalist 

தூத்துக்குடி மாவட்ட கனிமொழி எம்பி

இன்று தாமிரபரணி ஆற்றில் 2 லட்சம் நாட்டின கெண்டை மீன்குஞ்சுகள் இருப்பு செய்திட உயிருடன்  ஆற்றில் விட்டார் ஆற்றில் மீன் குஞ்சுகள் குஷியில் துள்ளி குதித்து சென்றது.



இதுபற்றி செய்தியாவது:-

  

தமிழகம் முழுவதும் உள்நாட்டு மீன் பிடிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் மீன்வளத்துறை மூலமாக குளம், ஆறு உள்ளிட்ட பகுதிகளில் மீன் குஞ்சுகள் விடப்படுகிறது.

 

 உலக மீனவர் தினத்தை முன்னிட்டு..

இன்று (16/11/2023) வியாழக்கிழமை, தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி அணைக்கட்டு பகுதியில் உள்ள ஆற்றில் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது .


தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி   தாமிரபரணி ஆற்றில் 2 லட்சம் நாட்டின கெண்டை மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் வகையில் ஆற்றில் விட்டார் மீன் குஞ்சுகள் குஷியில் துள்ளி குதித்து சென்றது.



இந்நிகழ்ச்சியில் ...மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான .அனிதா இராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் லெட்சுமிபதி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் .பிரம்மசக்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக