தூத்துக்குடி மாவட்டம் : 17.10.2023.
தூத்துக்குடி ராணுவ வீரர் இறப்பு செய்தி குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது .
இதுசம்மந்தமாக உண்மைக்கு புறம்பான செய்திகளையோ, வீடியோ, ஆடியோ போன்றவற்றை வாட்ஸ் ஆப் குழுக்கள், முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் யாரும் பதிவேற்றம் செய்ய வேண்டாம்
இதுபற்றி செய்தியாவது
தூத்துக்குடி மாவட்டம், மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெம்பூர் காலனியைச் சேர்ந்த வேதமுத்து மகன் வேல்முருகன் (24) என்ற இராணுவ வீரர் கொலையுண்டு இறந்துள்ளார் .
இது சம்மந்தமாக மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து உரிய புலன் விசாரணை செய்து சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த கொலை வழக்கு சம்மந்தமாக உண்மைக்கு புறம்பான செய்திகளையோ, வீடியோ, ஆடியோ போன்றவற்றை வாட்ஸ் ஆப் குழுக்கள், முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் யாரும் பதிவேற்றம் செய்ய வேண்டாம் என காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வழக்கின் புலன் விசாரணையை பாதிக்கின்ற வகையில் சட்டத்தை மீறி உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் எச்சரித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக