thoothukudileaks 13-9-2023
news by arunan journalist
தூத்துக்குடி மாவட்டம் 14 பஞ்சாயத்து சுற்று வட்டார கிராம பகுதிகளில் குடிநீர் பஞ்சம் நிலவுகிறது எனவும் கலங்கல் ஏதுமின்றி சுத்தமான நல்ல குடிநீர் விநியோகம் வழங்கிட தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் மற்றும் கனிமொழி எம்பி மற்றும் அமைச்சரிடம் நேரில் நேற்று ( 12-9-2023 )1 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் Dr ராஜேஷ்குமார் ஊராட்சி தலைவர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
இது குறித்து நேற்று நமது தூத்துக்குடி லீக்ஸ் தளத்தில் செய்தியும் வெளிவந்தது.
இன்று...
13-9-2023 உடனடி நடவடிக்கை யாக....
தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி அவர்கள். இதனைத் தொடர்ந்து, சீரான குடிநீர் விநியோகத்தை தற்காலிகமாக வழங்குவதற்கு மஞ்சள்நீர்காயல் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்திடவும், நிரந்தரமாக அங்கிருந்து பைப்லைன் மூலம் தண்ணீர் வழங்கிடும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது!
இந்த வருடம் பருவமழை பொய்த்து போனதால் மணிமுத்தாறு, சேர்வலாறு அணைக்கட்டில் இருந்து வருகிற தண்ணீர் குறைவாக வருகிறது.
இதன் காரணமாக கூட்டுக் குடிநீர் திட்டத்தில் கடைசி பகுதியான தூத்துக்குடி மாவட்டம், வாழவல்லான், அகரம், முக்காணி, உமரிக்காடு, பழைய காயல் உள்ளிட்ட 12 ஊராட்சிகளை சேர்ந்த பகுதிகளுக்கு சீரான குடிநீர் விநியோகம் வழங்குவதில் சிரமம் ஏற்பட்ட நிலையில், இன்று (13/09/2023) மஞ்சள்நீர்காயல் பகுதியில் உள்ள குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் வாழவல்லான் பகுதியில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றிற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் .
![]() |
| நேற்று தூத்துக்குடி லீக்ஸ் தளத்தில் வந்து ஸ்கீரின் ஷாட் |
உடன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இணை மேலாண்மை இயக்குநர் சரவணன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்பசக்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்!


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக