thoothukudi leaks:-25-8-2023
special Photo :-arunan
news by:- shanmugasuntharam
அதிமுக வழக்கு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வெளியானதும்...
தூத்துக்குடியில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார் .
இது பற்றிய விவரமாவது:-
அ.தி.மு.க பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 24ம் தேதி தீர்ப்பளித்தது.
இந்நிலையில் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லாது என்று அறிவிக்கக் கோரி ஓ.பி.எஸ். தரப்பினர் நான்கு பேர் உயர்நீதிமன்ற தனி நீதிபதியிடம் மேல்முறையீடு செய்திருந்தனர்.
அந்த வழக்கை நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு இருதரப்பினரின் கருத்துக்களையும் கேட்டறிந்தனர்.
இன்று 25-8-2023 வெளிவந்த இந்த வழக்கின் தீர்ப்பு ,இரு நீதிபதிகள் கொண்ட டிவிஷன் பென்ச் ஓ.பி.எஸ். தரப்பினர் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று அதிமுக மாநில அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தூத்துக்குடி சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் இன்று காலை 11மணியளவில்...
தூத்துக்குடி புதிய மாநகராட்சி அருகில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார் .
நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளரும் மாநகராட்சி எதிர்கட்சி தலைவருமான வக்கீல் வீரபாகு, முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் ரத்தினம், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், பகுதி செயலாளர் பொன்ராஜ், முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் ராஜாராம், கோமதி மணிகண்டன், முன்னாள் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி துணைச்செயலாளர் ஞான்ராஜ், மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் பொறுப்பு சிவசுப்பிரமணியன், பிஎன்டி காலனி முருகேசன், வட்டச்செயலாளர்கள் ராஜா, அருண்குமார், துரைசிங், சகாயராஜ், ஜெனோபர், அந்தோணிராஜ், முன்னாள் வட்டச்செயலாளர்கள் கோட்டாளமுத்து, சங்கர், பாபநாசம், ஹெய்னஸ், சீனிவாசன், சகாயராஜ், அசோகன், பாக்கியராஜ், போக்குவரத்து பிரிவு முன்னாள் மாநில துணைத்தலைவர் டெரன்ஸ், மண்டல முன்னாள் இணைச்செயலாளர் சங்கர், வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளர் கௌதம் பாண்டியன், முன்னாள் மாவட்ட மீனரவணி இணைச்செயலாளர் துரைபாண்டியன், பகுதி இணைச்செயலாளர் வீரக்கோன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி முருகேசன், போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் ராஜேந்திரன், பேச்சியப்பன், சிறுபான்மை பிரிவு அசன், பிரபாகர் மற்றும் மனோகர் மூக்கையா, அந்தோனிராஜ், ஆறுமுகம், சித்திரைவேல், மணிகண்டன், ராஜசேகர், வெங்கடாச்சலம், பொன்ராஜ், ஆறுமுகநயினார், ஆறுமுகம், சுப்புராஜ், பிச்சையா, காசி, முருகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக