thoothukudi leaks18-8-2023
Photo news by raja
தூத்துக்குடி பிரான்சிஸ் சவேரியார் மேல் நிலைப் பள்ளியில் குறுவட்டம் பூப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது.
ஹோலி கிராஸ்ஆங்கிலோ இந்தியன்பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் முதலிடம்
வெற்றி பெற்ற பூப்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு பரிசுகளையும் சான்றிதழ் வழங்கினர்.
இது பற்றிய செய்தியாவது:-
இன்று 18.08.2023 வெள்ளிக்கிழமை தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்ற பள்ளிகளுக்கு நடுவேயான குறுவட்டம் பூப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது.
இதில் பெண்கள் பிரிவில் 14 வயதுக்கு உட்பட்ட ஜுனியர் பிரிவிலும், 17 வயதுக்கு உட்பட்ட, சீனியர் பிரிவிலும் மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட சூப்பர் சீனியர் பிரிவிலும் ஹோலிக்கிராஸ் ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர்களே முதலிடத்தை பெற்றனர்.
ஜுனியர் பிரிவினர் அபிகேல் மஸ்கர்னாஸ் தலைமையில்
கிறிஸ்டின் இனியா, அக்ஷ்னா, ஆதர்ஷனி, டேக்ஷ்ரா, தக்ஸா, ஜோஷினி கொரேரா, தனுஜா, நித்யஷிரி ஆகியோரும்,
சீனியர் பிரிவினர் எலேஜா தலைமையில்
நிரஞ்சனா ஸ்ரீமதி, ஸ்டபனி, டிரிபினா, அணுதீக்ஷனா,ஷமிரா, எலிஷா, பெலிஷா, அட்லின் யாழினி, சேன்டா டனியா ஆகியோரும், சூப்பர் சீனியர் பிரிவினர் அபிஷா தலைமையில் அட்ரினா கொரேரா , ஸ்னோ ஸ்டோரி, டிவினா மேக்டாலினி, மேலானி,ஹன்சா ரிங்ஸ், ஜெருஷா, ஜெய அபி ஸ்சான்ட்ரா ஆகியோரும் அபாரமாக விளையாடி வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற பூப்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு உடனுக்குடன் பரிசுகளையும் சான்றிதழ்களையும் புனித பிரான்சிஸ் சவேரியார் மேல் நிலைப் பள்ளி நிர்வாகத்தினர் அளித்தனர்.
வெற்றி பெற்ற மாணவியர்கள் அனைவரையும் பயிற்சியாளர் பாலசிங் அவர்களும், ஹோலிக்கிராஸ் ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசியை பாத்திமா , உடல்கல்வி ஆசிரியைகள் சோபியா மற்றும் சுஜிதா தெரேஸ் ஆகியோரும் வாழ்த்தினார்கள்.
வருங்காலத்தில் மண்டல அளவிலான மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளிலும் இதே போல வெற்றி பெற வேண்டும் என்றும் அதற்கான பயிற்சிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்று வீராங்கனைகளுக்கு அறிவுறுத்தினார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக