தூத்துக்குடி மாவட்டம்: 16.05.2023
தூத்துக்குடி மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் ஆலோசனை கூட்டம்
இதுபற்றி செய்தியாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் புலன் விசாரணையில் உள்ள வழக்குகள் குறித்தும், அவற்றை விரைந்து முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது குறித்தும், விசாரணையில் உள்ள வழக்குகளில் சாட்சிகளை காலதாமதமில்லாமல் ஆஜர்படுத்தி வழக்கு விசாரணையை விரைந்து முடிப்பது குறித்தும் காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் நீதிமன்ற அலுவல்புரியும் காவல் ஆளினர்களுடன் இன்று (16.05.2023) மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் புலன் விசாரணையில் உள்ள வழக்குகளின் நிலை குறித்து ஆய்வு செய்து அவற்றை விரைந்து முடிப்பதற்கு அறிவுரைகள் வழங்கினார்.
மேலும் இதில் நீதிமன்ற அலுவல் குறித்து சிறப்பான முறையில் பதிலளித்த ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர் முத்துராமன், சங்கரலிங்கபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துமாரி மற்றும் ஏரல் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஸ்ரீதர் ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் வெகுமதி வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்வில் காவல் துணை கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி உட்கோட்டம் சத்தியராஜ், திருச்செந்தூர் வசந்த்ராஜ், ஸ்ரீவைகுண்டம் மாயவன், கோவில்பட்டி . வெங்கடேஷ், மணியாச்சி லோகேஸ்வரன், சாத்தான்குளம் அருள், விளாத்திகுளம் ஜெயச்சந்திரன், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு சம்பத், மதுவிலக்கு அமலாக்க பிரிவு திரு. சிவசுப்பு உட்பட காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் நீதிமன்ற அலுவல்புரியும் காவல்துறை ஆளினர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக