செவ்வாய், 2 மே, 2023

ஸ்டெர்லைட் எதிர்ப்பு VS ஆதரவு தமிழக அரசு யார் பக்கம் திணறும் தூத்துக்குடி!!! ‌‌ கலெக்டர் அலுவலகம் முன்பு ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் பெண்கள் உட்பட பொதுமக்கள் 500 க்கும் மேற்பட்டோர் திரண்டுதால் பரபரப்பு சாலை மறியல் காவல்துறை கைது நடவடிக்கை

thoothukudileaks 2-4-2023

photo news by arunan 

ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை அகற்றுக சிறப்பு சட்டம் இயற்றுக...

கலெக்டர் அலுவலகம் முன்பு ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் பொதுமக்கள் திரண்டுதால் பரபரப்பு சாலை மறியல் 

காவல்துறை கைது நடவடிக்கை





தூத்துக்குடியில் கடந்த  வாரத்திற்கு முன்பு ஸ்டெர்லைட் ஆலை ஆதரவாளர்கள் என கூறி நூற்றுக்கணக்கான பேர்கள் திரண்டு வந்து தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் வந்து மனு அளித்தனர்.

டிவி மற்றும் நாளிதழ்களில் செய்தி பெரிதாக வெளியிட்டுள்ளது 


இதனால் ? தூத்துக்குடியில் பொதுமக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது.ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் காவல்துறையால் துப்பாக்கி சூட்டில் 16 உயிரழப்பு துன்புறுத்தல்கள் அடித்து சித்ரவதை கள் வழக்குகள் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை இயங்க முயற்சிக்கிறதா ? என்று பொதுமக்கள் மத்தியில் கொதித்து போயுள்ளார்கள்.




இந்நிலையில்...ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் மாநில ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபு...


ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் தனலட்சுமி,நான்சி, சந்தனராஜ், சம்சு மற்றும் 10 பேர் மீது காவல்துறை அதிகாரி இடம் 19-4-2023அன்று புகார் மனு அளித்தார்.

இன்று வரை நடவடிக்கை இல்லை என்கிறார்கள்.


இதனிடையே விவிடி சிக்னல் பகுதியில் ஸ்டெர்லைட் ஆலை திறக்க வேண்டும் என ஒரு அமைப்பு ஆர்ப்பாட்டம் பேட்டி அளித்தது அதுவும் ஊடகங்கள் பெரியதாக வெளிச்சம் போட்டுக் காட்டியது.


 அதன் வெளிப்பாடாக சென்ற வாரம் நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பு மற்றும் பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் ஏராளமான பெண்கள் உட்பட கலெக்டர் அலுவலகம் முற்றுகை பின் தூத்துக்குடி கலெக்டர் செந்தில் ராஜ் இடம் ஸ்டெர்லைட் ஆலை யின் ஆதரவாளர்கள் மீது இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுங்கள் மனு அளித்து பேட்டியளித்தனர் 

ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்தால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் எனவும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு அழுத்தமாக தெரிவித்து இருந்தனர்.


மாவட்ட நிர்வாகம் அமைதி காக்க முயன்றது.


இன்று...

 02-05-2023  மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் அறப்போராட்டம் நடைபெற்றது 

வீடியோ பார்க்க ....

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு மற்றும் அனைத்து ஜனநாயக அமைப்புகளும் ஒன்று கூடி 


மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு வெளியே.... நின்றார் கள்.

காவல்துறை கூடியிருந்த மக்களை உள்ளே செல்ல அனுமதி மறுத்தனர். வெறும் பத்து பேரை மட்டும் அனுமதிக்கிறோம்" என்று கூறினார்கள். 


கூட்டமைப்பினர் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு  வளாகத்தின் உள்ளே வர அனுமதி தர வேண்டி ஜனநாயக முறையில் காவல்துறையிடம் கோரிக்கை வைத்தனர். 

 காவல்துறை"நிச்சயமாக அனுமதிக்க முடியாது" என்று கூறினர். மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க அனுமதி மறுத்ததால் ... சாலை மறியலில் ஈடுபட்டனர். 

போராட்ட களத்தில்....

கா.மை. அகமது இக் பால் 

மாவட்ட செயலாளர்

மத்திய மாவட்டம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் தோழர்கள் 

முருகபூபதி 

மாநகர செயலாளர்

மதிமுக மற்றும் தோழர்கள்


அசன் 

மாவட்ட செயலாளர்

மமக மற்றும் தோழர்கள்


sdpi

காதர்மைதீன்

மாவட்ட பொதுச்செயலாளர் மற்றும் தோழர்கள்


தாஸ்

மாவட்ட செயலாளர் தமிழ் புலிகள் கட்சி மற்றும் தோழர்கள்


குமார்

தூத்துக்குடி அனைத்து மீனவர் கூட்டமைப்பு மற்றும் தோழர்கள்


செய்யது சம்சுதீன்

மாவட்ட தலைவர்

ஐமுமுக மற்றும் தோழர்கள்

ஜெயராஜ்

மாநில பொறுப்பாளர்

மாற்றுதிறனாளிகள் நலவாழ்வு சங்கம் மற்றும் தோழர்கள்

சந்தனராஜ்

மாவட்ட செயலாளர்

தமிழர் விடியல் கட்சி

மற்றும் தோழர்கள்


பிரசாத்

மாவட்ட பொறுப்பாளர்

த.பெ.தி.க மற்றும் தோழர்கள்


செல்வம்

மக்கள் அதிகாரம் மற்றும் தோழர்கள்


காந்திமள்ளர்

தலைவர்

தமிழக மக்கள் கட்சி


ஒருங்கிணைப்பு


ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு

வழக்கறிஞர் ஹரிராகவன்


மற்றும் பொதுமக்கள்.

 தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்...

 ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் அரசியல் கட்சி மற்றும் பொதுமக்கள் ஆகியோர் வைத்த கோரிக்கை... 

ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் தூத்துக்குடியயை விட்டு அகற்றுக 

சிறப்பு சட்டம் இயற்றுக

ஜிப்சம் அகற்றல், ஆலை பராமரிப்பு என்ற 

நச்சு ஆலை ஸ்டெர்லைட்டின் நாடகங்கள் வேண்டாம் 

நாசகார ஸ்டெர்லைட் நிர்வாகம் பணத்தை இறைத்து கைக்கூலிகளை வைத்து வேலை செய்வது..

நலத்திட்ட உதவி என்ற பெயரில் சாதிய, மதவாத கும்பல்களை தூண்டிவிட்டு தூத்துக்குடியின் பொது அமைதியை குலைப்பதை தடுக்க வேண்டும்..


என கோரிக்கை களுடன் கலெக்டர் செந்தில் ராஜ் இடம் மனு கொடுக்க சுமார் ஐநூறு -க்கும் மேற்பட்டோர் பெண்கள் உட்பட திரண்டு நின்றதால் அப்பகுதியில்  பதற்றம் ஏற்பட்டது .


உணர்ச்சி கரமாக ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு கோஷமிட்டு சாலையில் அமர்ந்து விட்டனர் இதனால் தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.



உடனே அனைவரையும் கைது செய்து பேருந்து ஏற்றி மடத்தூர் திருமண மண்டபம் கொண்டு சென்றனர்

கைது நடவடிக்கை யில் ஈடுபட்ட போது சிலர் அடம் பிடிக்க போலீஸ் அலேக்காக தூக்கி கொண்டு  பேருந்துவில் ஏற்றினர்.

வீடியோ பார்க்க ...

 தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் டி.எஸ்.பி.,கள் அருண் ஜெயராஜ் இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், ஜின்னா பீர்முகமது, வின்சென்ட் அன்பரசி, மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் உள்பட ஏராளமான போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபட்டனர்.

 ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் உடனடியாக பிரஸ்மீட் 

இன்று ஸ்டெர்லைட் எதிராக போராடியவர்கள்  தூத்துக்குடி காரர்களே அல்ல அவர்கள் வெளிநாட்டு அந்நிய சக்தி என்று ஸ்டெர்லைட் ஆதரவு குழு பேட்டி அளித்தனர்.

 
ஸ்டெர்லைட் ஆலை ஆதரவாக பிரஸ்மீட் க்கு வந்தவர்கள்...

இது சம்பந்தமாக ஸ்டெர்லைட் ஆதரவு குழு சார்பில் உடனே இன்று மே2 மாலை 4மணிஅளவில் ஸ்டெர்லைட் அருகில் உள்ள எஸ் டி ஆர் அலுவலகத்தில் வைத்து நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது.... கூறுகையில் ...
ஸ்டெர்லைட் எதிராக காலையில் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் தூத்துக்குடி காரர்களே அல்ல அவர்கள் வெளிநாட்டு சதி என்று பகீர் பேட்டி அளித்தனர் 

இன்று காலையில் ஸ்டெர்லைட் எதிராக பச்சிளம் குழந்தைகளை போராட்டத்தில் ஈடுபட வைத்தது வருங்கால சந்ததியினர் பாதிக்கும் அளவில் உள்ளது இதை ஸ்டெர்லைட் ஆதரவு குழு சார்பில் வன்மையாக கண்டிக்கின்றோம்.

 ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் செய்த அந்நிய சக்திகளை காவல் துறையினர் உடனே கைது செய்ய வேண்டும் பேட்டி அளித்தனர்.

தமிழக அரசு கவனிக்குமா??
தொடர்ந்து..
ஸ்டெர்லைட் ஆலை ஆதரவாளர் சிலர் அடிக்கடி பிரஸ்மீட் தருவதும்...

கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க ஆட்களை திரட்டி வருவதும்..

 தூத்துக்குடி எம்பி கனிமொழி அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் இஃது குறித்து பதில் தெரிவிக்காமலும்... நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் தான்..


இச் சூழ்நிலையில் தான்...

 ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் மத்தியில் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை மனு அளிக்க வருகிறார்கள் என்கிறார்கள்.
தமிழக அரசு யார் பக்கம்!?
இது சரிசெய்வார்களா ?!


பிரஸ்மீட் கொடுக்க இடம் கிடைக்காமல் தவித்த ஸ்டெர்லைட் ஆலை ஆதரவு குழு

வழக்கம் போல... ஹோட்டல் பானு பிருந்தாவனம் கூட்டரங்கில் பிரஸ்மீட் ஏற்பாடுகள் செய்திருந்தனர் என்ன நெருக்கடி தெரியல ? பானு பிருந்தாவனம் நிர்வாகம் இடம் தர மறுத்து விட்டார் கள். 

அதனால் பிரஸ்மீட் வைக்க இடம் தேடி அலைந்து கடைசியில் ஸ்டெர்லைட் ஆலை அருகில் இருக்கும் எஸ்டிஆர் அலுவலகத்தில் பிரஸ்மீட் நடத்தியதாக செய்தியாளர் கூறுகின்றனர்.

லொக்கேஷன் அனுப்பி செய்தியாளர்களை வரவழைத்து பிரஸ்மீட் வைத்தார்கள்.!!!!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக