thoothukudileaks 17-5-2023
photo news by shanmuga sunthram
தமிழக முதல்வர் ஸ்டாலின் தான் வருங்காலத்தில் பிரதமர் உடன்குடியில் ராமஜெயம் பேச்சு
இது பற்றிய செய்தியாவது
தூத்துக்குடி திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற வேண்டும். என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கிணங்க முதல்கட்டமாக நடைபெற்று முடிந்தது.
இரண்டாவது கட்டமாக மாநில திமுக இளைஞர் அணி செயலாளரும் விளையாட்டுதுறை அமைச்சருமான உதயநிதிஸ்டாலின் இளைஞர் அணி சார்பில் திராவிடமாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். என்று உத்தரவிட்டதையடுத்து தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், வழிகாட்டுதலின் படி திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உடன்குடி உதிரமாடன் குடியிருப்பு பகுதியில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவரும் மேற்கு ஒன்றிய செயலாளருமான பாலசிங் தலைமை வகித்தார்.
தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம் பேசியதாவது:-
, திமுக அரசு பொறுப்பேற்ற நாளில் கொரோனா பாதிப்பு நிதிநெருக்கடி எல்லாவற்றிலும் கருத்தில் கொண்டு நாட்டு மக்களுக்காக சிந்தித்து சிறப்பாக பணியாற்றி பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, படுக்கை வசதி அதிகரிக்கச் செய்து அதை சிறப்பாக கையாண்டு இந்தியாவிலேயே எந்த மாநில முதல்வரும் செய்யாத கொரோனா நோயாளிகளை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக அரசு பள்ளியில் படித்த மாணவ மாணவியர்களுக்கு 7.5 சதவீதம் இடஓதுக்கிடு மூலம் மருத்துவபடிப்புக்கும், பெண் கல்வி உதவித்தொகை திட்டங்களை அறிவித்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
செப்டம்பர் 15ம் தேதி முதல் மகளிர் உதவித்தொகை வழங்கப்படும். விவசாயத்திற்கு என தனி பட்ஜெட் செயல்படுத்தப்படுகிறது.
நெல் விவசாயம் செய்யும் பணிகள் அதிகரித்துள்ளது. 1.5 இலட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. வீடு கட்டும் திட்டம், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை அதிகரிப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமணை பட்டா வழங்கப்பட்டு வருகிறது.
நம்மை இடுப்பில் கட்ட சொன்ன துண்டு தற்போது தோளில் போடும் நிலைக்கு உயர்ந்துள்ளது. கோவிலுக்குள் சென்று வழிபாடு செய்வதற்கு மறுக்கப்பட்ட உரிமைக்கு விடுதலை வாங்கி கொடுத்தது திராவிட மாடல் ஆட்சிதான், இதனை பொறுக்க முடியாமல் தான் ஆளுநர் ரவி தினமும் ஏதாவது குட்டையை குளப்பி கொண்டு மீன்பிடிக்க திரிகிறார்கள்.
அதற்கு நாம் இடமளிக்க கூடாது திமுக அரசின் சாதனைகளை அனைத்து தரப்பினர் இல்லத்திற்கும் கொண்டு சேர்க்க வேண்டும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் உள்பட புதுச்சேரி 40 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடவேண்டும்.
தமிழகத்திலிருந்து முதல்வர் யாரை கைகாட்டுகிறாரோ அவர் தான் பிரதமர் என்ற நிலை உருவாக வேண்டும். வருங்காலத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தான் பிரதமர் ஆகிறார் என்று பேசினார்.
கூட்டத்தில் மாநில பேச்சாளர்கள் பல்வேறு அணி நிர்வாகிகள் திராளானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக