thoothukudileaks 7-3-2023
Photo news by Roja arunan
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு துப்பாக்கி சூடு பல பேர் உயிரழப்பு க்கு காவல்துறை யின் ஸ்டெர்லைட் ஆலை தரப்பு ஆதரவு அனுகுமுறை தான் என்பது தூத்துக்குடி மக்கள் அனைவரும் தெரிவிக்கின்றன. அதே போக்கு இன்னும் துளியும் மாறவே இல்லை !!! இஃது ஏன் ?என்பது தான் அனைவரின் கேள்வி யாக எழுகிறது.
கடந்த ஆட்சி மாறி திமுக ஆட்சியிலும் இதே நிலை நீடிக்கிறதை தமிழக முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் பல தடவைகள் கொண்டு சென்று வருகின்றனர்.
தற்போது...
தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சனையில் தூத்துக்குடி Rural D.S.P சுரேஷ்- ன் பொறுப்பற்ற பேச்சு!
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பாக
வன்மையான கண்டனங்கள் தெரிவிக்கிறார்கள்.
இதுபற்றிய செய்தியாவது -
தூத்துக்குடிக்கு தமிழக முதல்வர் இன்று வரும் சூழலில், ஸ்டெர்லைட் நிர்வாகம் பணம் கொடுத்து ஏற்பாடு செய்த சில கைக்கூலிகள் கிராமங்கள் தோறும் கூட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்கு முழு பாதுகாப்பும் காவல்துறை வழங்கி வருகிறது.
முதல்வரை இவர்கள் சந்திக்க இருப்பதாகவும், மகளிர் தின கூட்டம் நடத்த இருப்பதாகவும் தெரிவித்து பெரும் பணம் இறக்கிவிடப்பட்டு மக்களிடையே மோதலை உருவாக்கும் போக்கு வெளிப்படையாக நடக்கிறது.
ஸ்டெர்லைட் படுகொலையில் கொல்லப்பட்ட குடும்பங்கள், ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர், 10 பேர் கூடினாலே உடனே வந்து, மக்களிடம் பேசவிடாமல் தடுக்கும் காவல்துறை, கூலிகளை மட்டும் அனுமதிப்பது எப்படி? இதுகுறித்து புகார் அளித்தால், நாங்கள் விலகிக் கொள்கிறோம்,
இரு தரப்பும் மோதிப் பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறார் தூத்துக்குடி Rural DSP சுரேஷ். முதல்வர் வரும் நாளில் இப்பிரச்சனையை கையாளும் அதிகாரியின் பேச்சு, அவரின் சொந்தக் கருத்தா, தமிழக காவல்துறை, அரசின் கருத்தா?
திமுக அரசு - ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடுவதில் உறுதியாக உள்ளோம் என்று சொன்னதை நம்பி, அமைதியாய் இருக்கிறோம். அமைதியாக இருப்பதை, ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களின் பலவீனம் என்று அரசு கருதினால், தூத்துக்குடி மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களும், உலகத் தமிழர்களும் உரிய பதிலை, சரியான நேரத்தில் அளிப்பார்கள்.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு
9443584049, 7811940678, 8122275718, 7305172352, 9940971599, 9751119005, 9789497542, 9965345695, 9994242519, 9894574817, 8870457518, 9003615889, 7548856166.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக