thoothukudileaks 7-3-2023
news by arunan
மீண்டும் போராட்டத்தை கையில் எடுப்பதே ஒரே தீர்வு என தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் ஆவேசம் அடைந்துள்ளார்கள்.
இதுபற்றி...ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் வெளியீட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது -
ஸ்டெர்லைட் தாமிரா குடியிருப்பு இருப்பது தமிழ்நாடா?
அல்லது தனி நாடா?
ஸ்டெர்லைட் கைக்கூலிகளை தடுக்காத காவல்துறை - ஸ்டெர்லைட்டை எதிர்த்து மண்ணைக் காத்து நிற்கும் போராளிகளை மட்டும் தடுப்பதேன்?
மீண்டும் போராட்டத்தை கையில் எடுப்பதே ஒரே தீர்வு!
![]() |
| முடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலை (பழைய கோப்பு புகைப்படம்) |
தாமிரா குடியிருப்பு வளாகத்தில் ஸ்டெர்லைட் ஆதரவு போராட்டத்தை தீவிரப் படுத்த கைக்கூலிகளுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்கு தொடர்ச்சியாக ஏதாவது நிகழ்ச்சி அல்லது விழா என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்படுகிறது என்று பல புகார்கள் மாவட்ட நிர்வாகத்தினரிடம்கொடுக்கப்பட்டுள்ளன.
ஸ்டெர்லைட் நிறுவனத்தினர் இன்று மதியம் 2.00 மணிக்கு மகளிர் தின விழா ஏற்பாடு செய்த நிலையில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் தமிழக முதல்வர் தூத்துக்குடி வந்து போன பிறகு அதை மாலை 4.00 மணியில் இருந்து 6.00 மணியாக நைச்சியமாக மாற்றி வைத்துள்ளனர் என்ற தகவல் வந்துள்ளது.
அதற்காக தெற்கு வீரபாண்டியபுரம், சில்வர்புரம் லூசியா கார்னர், சாமிநத்தம், பாத்திமா நகர்,,உட்பட பல பகுதிகளில் பணத்தை வாரி இறைத்து ஆட்களை தற்சமயம் தயார் செய்து கொண்டுள்ளார்கள்.
மகளிர் தின விழா என்ற பெயரில் ஸ்டெர்லைட் ஆலையின் கைக்கூலிகள் கஸ்டெர்லைட் தாமிர குடியிருப்பில் கூடுவதை மாவட்ட நிர்வாகம் தடை செய்யுமா? அல்லது வேடிக்கை பார்க்குமா?
மாவட்ட நிர்வாகம் தடுக்காவிட்டால், ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களின் நிகழ்வுகளையும் இனி தடுக்கக் கூடாது!
விரைவில் நாமும் தொடர் போராட்டங்களை அறிவிப்போம்.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு
9443584049, 7811940678, 8122275718, 7305172352, 9940971599, 9751119005, 9789497542, 9965345695, 9994242519, 9894574817, 8870457518, 9003615889, 7548856166.
இவ்வாறு தெரிவித்துள்ளார் கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக