சனி, 18 மார்ச், 2023

தூத்துக்குடியில் மாநகராட்சியில் குடியிருப்பு பகுதியில் கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேடு மக்கள் அவதி!!!

 thoothukudileaks 18-3-2023

தூத்துக்குடியில் மாநகராட்சியில் குடியிருப்பு பகுதியில் கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேடு மக்கள் அவதி. 

இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 39 வார்டு செல்வீஜர் 1வது தெருவில் கடந்த சில நாட்களாக சுமார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 



இந்நிலையில்  வீடுகளில் இருந்து வெளிவரும் கழிவு நீர் குழாய் அடைபட்டு மக்கள் நடந்து செல்லும் பாதையில் கழிவு நீர் தேங்கி நிற்பதால் மக்கள் நடந்து செல்ல முடியாத நிலை நிலவுகிறது.  இதனால் தூ;நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டும் நிலை உள்ளது. 

இது தொடர்பாக ஒப்பந்ததாரர், 39 வது வார்டு கவுன்சிலர் இணை பொறியாளர். ஆணையரின்  நேர்முக உதவியாளர் மற்றும்  நகர் நல அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 


ஏற்கனவே பல்வேறு பகுதிகளில் வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில், கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளதால் மாநகராட்சி அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக