வெள்ளி, 24 மார்ச், 2023

தூத்துக்குடியில் மீண்டும் அதிமுக மீது வன்மம் காட்டிய அண்ணாமலை!!!

 thoothukudileaks 24-03-2023


தூத்துக்குடி மாநகரில் மீண்டும் அதிமுக மீது கோபம் வன்மம் தீரவில்லை என்பதை காட்டினார்? .பாஜக கட்சி தலைவர் அண்ணா மலை


இதுபற்றி ய செய்தியாவது:- 


தூத்துக்குடி மாநகரில் இன்று 24-03-2023 அபிராமி மஹாலில் பாஜக கட்சி நிகழ்ச்சி நடைபெறுகிறது.


அதை முன்னிட்டு பா.ஜ.கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை தூத்துக்குடிக்கு இன்று24-3-2023 காலை விமானம் மூலம் வந்தார். 


தூத்துக்குடி யில் உள்ள அரசியல் தலைவர்கள் திருவுருவ சிலை க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு நிகழ்ச்சி யில் கலந்து கொண்டார். 

தூத்துக்குடியில் உள்ள முத்துராமலிங்கத் தேவர், அம்பேத்கர், குரூஸ்பர்னாந்து, வ.உ.சிதம்பரனார், காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.




 தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் இருக்கும் வ.உ. சிதம்பரம் பிள்ளை சிலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அப்போது அதன் அருகில் இருக்கின்ற அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் சிலையை கண்டு கொள்ளாமல் மாலை அணவிக்காமல் சென்றார்.

 

கடந்த சில மாதங்களாக ஒபி எஸ் தரப்பில் நெருக்கம் காட்டியதால் அதிமுக வினர் எடப்பாடியார் உட்பட பாஜக கூட்டணி தங்களுடன்‌ இருக்கின்றதா ? குழப்பமான சூழ்நிலை நிலவியது.

இதில் மறைமுகமாக(23-3-2023) நேற்று அண்ணா மலை டெல்லி செல்லும் போது விமான நிலைய  பேட்டி யில் அதிமுக பெயரை குறிப்பிடாமல் ... கூட்டணி கட்சிகளை பற்றி விமர்சித்து அதிமுக வை குத்தி காட்டினார்.


இந்நிலையில் தூத்துக்குடி யில் அதிமுக எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்காமல் சென்றிருப்பது ... அண்ணா மலை மீது அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதனிடையே தூத்துக்குடியில் பாஜக அண்ணா மலை 

வரவேற்று வைக்கப்பட்ட போர்டுகளை தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தினர் அப்புறப்படுத்தியதைக் கண்டித்து பா.ஜ.க., வினர் போராட்டத்தால் ஈடுபட்டனர்.இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக