ஞாயிறு, 26 மார்ச், 2023

தூத்துக்குடி 38வது வார்டு பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் குறை கேட்பு நகர்வலம்

 thoothukudileaks 26-3-2023

photo news by shanmuga sunthram 

தூத்துக்குடி 38வது வார்டு பகுதியில் அமைச்சர் கீதாஜீவன்  பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.  

இதுபற்றி செய்தியாவது:-

தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்து வருகிறார்.



தூத்துக்குடி மாநகராட்;சி 38வது வார்டுக்குட்பட்ட மீ னாகானா தெரு, ஜெயலானிதெரு, கோழி முடுக்கு சந்து, மற்றும் வார்டுக்குட்பட்ட பகுதிகளில் அமைச்சர் கீதா ஜீவன் சென்றார்...

 அங்கே..வேலைவாய்ப்பு, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, கால்வாய் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.

     அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஜெயலானி தெரு புதிய சாலை அமைக்க வேண்டும். கோழி முடுக்கு சந்து பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைத்து கொடுத்து கழிநீர் செல்வதற்கு கால்வாய் வசதிகள் முறையாக செய்து கொடுக்க வேண்டும். 

புதிய தார்சாலை மற்றும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் போது பழைய சாலையை தூர்வாரி உயரம் ஆகாதவாறு பழைய சாலை அளவுபடியே அமைக்க வேண்டும். என்று கோரிக்கை வைத்தனர். 


அமைச்சர் கீதா ஜீவன்  அவர்கள் இடம் உங்களது கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றி தருவேன் என்று உறுதியளித்தார்.

     நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டல தலைவர் கலைச்செல்வி, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாநகர மருத்துவ அணி அமைப்பாளர் அருண்குமார்,  கவுன்சிலர் மும்தாஜ், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் அருண்சுந்தர், பகுதி செயலாளர் சுரேஷ்குமார், வட்ட செயலாளர்கள் கங்காராஜேஷ், சுரேஷ், மாவட்ட பிரதிநிதிகள் செந்தில்குமார், நாராயணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் நாகராஜன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் வக்கீல் சீனிவாசன், வட்ட பிரதிநிதி பாஸ்கர், இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் மாவட்ட தலைவர் மீராசா, ஜெயராமன், கணேசன், திலகர், வைரமுத்து, மாரியப்பன், மற்றும் மணி, அரபி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக