thoothukudileaks 11-2-2023
தூத்துக்குடி மாநகராட்சியில் மாநகர நல அலுவலர்
(CITY HEALTH OFFICER )
எங்கே???.... மக்களின் வரிப்பணத்தில் நிர்வாகம் செய்யும் தூத்துக்குடி மாநகராட்சி, தூத்துக்குடி மாநகர மக்களின் நலனில் அக்கறையோடு செயல்பட வேண்டும்.
மாநகர நல அலுவலர்(CHO ) MBBS முடித்துவிட்டு MPH (master of public health ) என்ற முதுகலை படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தூத்துக்குடி போன்ற பெரிய நகரங்களில் ஒரு தொற்றுநோய் அல்லது கொள்ளை நோய் பரவும் பட்சத்தில் சிறப்பாக செயல்பட்டு அதை தடுக்க முடியும்.
ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக CHO இல்லாமல் தூத்துக்குடி மாநகராட்சி செயல்பட்டு வருகிறது.
சும்மா பெயருக்கு சுகாதார அலுவலர் ஒருவரையும், ஒரு சாதாரண மருத்துவரையும் பொறுப்பில் போட்டு நடத்தி வருகிறார்கள்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் வரி வசூலிப்பதில் காட்டும் ஆர்வத்தையும் வேகத்தையும் மக்களுக்கு திருப்பி சேவை அளிப்பதில் மாநகராட்சி நிர்வாகம் காட்ட வேண்டும்.
உடனடியாக தகுதியான MPH படித்த மாநகர நல அலுவலர் நியமிக்க வேண்டுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக