திமுக ஆட்சியில் மக்கள் விரோத செயல்களை சுட்டிக்காட்டுவதே எதிர்கட்சியான அதிமுக தான் இது எங்கள் தலையாய கடமை என தூத்துக்குடியில் நடைபெற்ற வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் அதிரடி பேசினார்.
இதுபற்றிய செய்தியாவது -
இருமொழிக் கொள்கை தமிழகத்தில் 1965 ஆம் ஆண்டு காலகட்டத்திற்கு முன் இந்தி மொழியை கட்டாயமாக தமிழகத்தில் திணிக்கும் போது தமிழ் மொழிக்காக உயிர் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்திடுவர் வீரவணக்க நாளாகும்.
இதை முன்னிட்டு பொதுக்கூட்டம் தூத்துக்குடி அண்ணா நகர் 7வது தெரு, டுவிபுரம் ஐந்தாவது தெரு மெயின் ரோடு சந்திப்பில் வைத்து நடந்தது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட மாணவர் அணி செயலாளர் பில்லா விக்னேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட கழக அவைத் தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா. சுதாகர், எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஜோதிமணி, பகுதி கழக செயலாளர்கள் முன்னாள் துணை மேயர் பி.சேவியர், ஏ.முருகன், பொன்ராஜ், ஜெய்கணேஷ், நட்டார்முத்து மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் மாநகராட்சி கவுன்சிலர் மந்திரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாணவர் அணி தலைவர் சிவரத்தினம் வரவேற்று பேசினார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் பேசியதாவது.:-
தமிழ் மொழிக்காக தனது உயிரை துச்சமாக நினைத்து உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் வீரர்களுக்காக இந்த பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
தமிழ் மொழிக்காக உயிரை விட்ட இவர்களின் நினைவை போற்றி வீரவணக்கம் செலுத்தும் தார்மீக உரிமை நமது இயக்கத்திற்கு உண்டு. திமுகவிற்கு கிடையாது. ஏனென்றால் திமுக மத்தியில் காங்கிரஸ் அரசோடு கூட்டணி வைத்துக் கொண்ட போதெல்லாம் தமிழ் மொழிக்கு எதிராக நடைபெற்ற குற்ற செயல்களுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளது. தமிழகத்திற்கு சொந்தமான கச்சத்தீவை தாரை வார்த்தது. இலங்கை தமிழர் போரை நிறுத்துவதற்காக உண்ணாவிரதம் நாடகமாடி அன்றைய தினம் ஒரே நாளில் 1.50 லட்சம் தமிழர்கள் உயிரிழப்பிற்கு காரணமாக அமைந்தவர் அன்றைய முதல்வர் கருணாநிதி.
மத்திய காங்கிரஸ் அரசோடு கூட்டு சேர்ந்து தமிழர்களின் மீதானா அந்த தாக்குதலை தடுக்க தவறி விட்டார். எனவே தமிழ் மொழிக்கு எதிராக பல்வேறு செயல்களில் ஈடுபட்ட திமுக மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் அருகதையற்றது ???
தூத்துக்குடியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் நான் மக்கள் பிரச்சனையை கருத்தில் கொண்டு பேசினேன் எனது பேச்சுக்கு பதிலளிக்க வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடத்திய திமுக மாநகராட்சியில் கடந்த எடப்பாடியார் ஆட்சி காலத்தில் பல கோடி ரூபாய் கொள்ளை அடித்ததாக பொய்யான குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர்.
அவர்கள் கூறும் அந்தத் திட்டத்தின் மதிப்பீடே குறைவானதுதான் விஷயம் அவ்வாறு இருக்க பலநூறு கோடி ரூபாய் கொள்ளையடித்ததாக கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. பொறுப்பில் இருப்பவர்கள் திட்டத்தின் மதிப்பீட்டை திட்டத்தைப் பற்றி நன்கு தெரிந்து பேச வேண்டும்.
திமுக ஆட்சி 18 மாதம் ஆட்சி செய்து உள்ளது இந்த 18 மாதங்களில் நடைபெற்ற முறைகேடுகளையும் தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை எதையும் நிறைவேற்றவில்லை. தேர்தலில் போலியான வாக்குறுதிகள் மூலம் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று அதை திமுக அரசு நிறைவேற்றவில்லை.
அந்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற சொல்லியும் திமுக அரசின் குற்றங்களை தமிழகத்தின் எதிர்க்கட்சியான அதிமுக சுட்டிக்காட்டும் அதுவே எங்கள் தலையாய கடமை.
மக்கள் நலனுக்காக திமுகவை எதிர்த்து அதிமுக குரல் கொடுத்துக் கொண்டே இருக்கும் அது எங்கள் கடமை
இவ்வாறு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் அதிரடி பேசினார்.
இந்தப் பொதுக்கூட்டத்தில் தலைமைக் கழக பேச்சாளர்கள் மதுரை பாரதீயன், சிவகாசி சின்னத்தம்பி, மாவட்ட வழக்கறிஞரணி செயலாளர் யு.எஸ். சேகர், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் வீரபாகு, முன்னாள் மாவட்ட செயலாளர் இரா.ஹென்றி, மாவட்ட துணைச் செயலாளர் சந்தனம், முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி, ஒன்றியச் செயலாளர்கள் விஜயகுமார், செம்பூர் ராஜநாராயணன், காயல்பட்டினம் நகர செயலாளர் டாக்டர் காயல் மௌலானா, துணை செயலாளர் பூந்தோட்டம் மனோகரன்,பிற அணி செயலாளர்கள் நடராஜன், கே.ஜே.பிரபாகர்,ஜெ.ஜெ.தனராஜ், அருண்ஜெபக்குமார், அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து மண்டல செயலாளர் கல்விக்குமார், மீனவரணி ஏரோமியாஸ், முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் சுகந்தன்ஆதித்தன், கோமதிமணிகண்டன், ஆன்ட்ருமணி, பிள்ளை விநாயகம், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர்கள் சத்யாலெட்சுமணன், முத்துக்கனி, முருகன், நிர்வாகிகள் வலசை வெயிலு முத்து, திருச்சிற்றம்பலம், ஜோஸ்வா அன்பு பாலன், எம்ஜிஆர் மன்ற துணைச்செயலளர் ஜோதிடர் ரமேஷ் கிருஷ்ணன், வக்கீல்கள் முனியசாமி, செங்குட்டுவன், சரவணபெருமாள், நிர்வாகிகள் ஐடியல் பரமசிவன், கேடிசி ஆறுமுகம், எம்.பெருமாள், பிராங்கிளின் ஜோஸ், மாவட்ட மாணவர் அணி துணை தலைவர் அன்டோ, மாநகராட்சி கவுன்சிலர் வெற்றிச்செல்வன், முன்னாள் கவுன்சிலர்கள் சுடலைமணி, செண்பக செல்வன், முத்துமதி, முபாரக் ஜான், பெரியசாமி, பொன்ராஜ், டேவிட் ஏசுவடியான், மனோகர், செல்லப்பா, நிர்வாகிகள் பி.ஜே.சி.சுரேஷ், வர்த்தக அணி சுகுமார், எ.கே.மைதின், ஜான்சன்தேவராஜ், மிக்கேல், முத்துகிருஷ்ணா, அண்ணா தொழிற்சங்கம் போக்குவரத்து பிரிவு ஆதிராஜ்வெள்ளையா, பொன்சிங், மின்சார பிரிவு ஜவஹர், ஆனந்தராஜ், நிர்வாகிகள் கே.கே.பி.விஜயன், கணேசன் செட்டியார், எஸ்.கே.மாரியப்பன், ஹார்பர் பாண்டி, சிவன், மகாராஜன், உலகநாதபெருமாள், வட்ட செயலாளர்கள் ஜனார்த்தனன், சொக்கலிங்கம், ராமச்சந்திரன், கொம்பையா, வெங்கடேஷ், கவிராம், அருண்ஜெயக்குமார், மணிவண்ணன், மணிகண்டன், நவ்சாத், ஜெயக்குமார், அந்தோணிராஜ், ஈஸ்வரன், ரவிந்திரன், பூர்ணசந்திரன், செல்வராஜ், முருகேசன், மாரிமுத்து, யோவான், ஏசுதாஸ், மகளிர்கள் இந்திரா, பத்மாவதி, லதா, முத்துலெட்சுமி, மருதம்மாள், பானுமதி, சரோஜா மற்றும் பகுதி மாணவரணி செயலாளர் சுப்பிரமணி பாண்டியன், சுந்தரேஸ்வரன், பரிபூரணராஜா, உதயகுமார், இளையராஜா, ராஜன்கண்ணா, நிலாசந்திரன், தீனாவசந்த், ஆனந்த், இம்ரான், ஆல்வின் துரை, சரவணவேல், சுப்பிரமணி, யுவன் பாலா, மைதின், டேவிட், உதயகுமார், விவிடி முருகன், இசக்கி ராஜா, மற்றும் பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக