செவ்வாய், 10 ஜனவரி, 2023

மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம் தூத்துக்குடியில் கலெக்டர் மேயர் ஆனையர் பங்கேற்பு

 thoothukudileaks10-1-2023

news photo by:- shanmuga Sundaram 

தூத்துக்குடி.மாவட்டம்

தூத்துக்குடியில் மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம் இன்று 10-1-2023 காலை 10மணியளவில் நடைபெற்றது.



இதுபற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி ஜின்பேக்டரி ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில்  சிறுவர்கள் முதல் 18 வயதினர் வரை உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் தொடங்கி வைத்தனர். 

  மாற்றுத்திறனாளிகளின் அனைத்து தரப்பு குறைபாடுகள் பரிசோதிக்க கூடிய சிறப்பு மருத்துவர்கள் முகாமில் கலந்து கொண்டனர்.

  இந்நிகழ்ச்சியில்...

மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதாவது: 

மாற்றுத்திறனாளிகளுக்கென்று இந்த அரசு எல்லா வகையிலும் உதவிகள் செய்து வருகின்றன.

 நமது மாவட்டத்திலும் பல உதவிகள் செய்யப்பட்டு அவர்களுக்கு தேவையான திட்டங்களையும் உடனுக்குடன் செய்து கொடுக்கப்படுகிறது. 

சராசரி மனிதர்களை போல் மாற்றுத்திறனாளிகளையும் இந்த அரசு சமமாக மதித்து நடத்துகிறது. 

இதுபோன்ற சிறப்பு முகாம்கள் முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் தொடரும். 

அனைத்து துறை மருத்துவர்களை கொண்டு நடத்தப்படும் இந்த முகாமை மாற்றுத்திறனாளிகள் நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். 

முதலமைச்சர் ஸ்டாலின் மக்கள் நலன் கருதி பணியாற்றி வருகிறார் என்று மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார். 

முகாமில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, சிறப்பு ஆசிரியர் சண்முகம், மேற்பார்வையாளர் பாரதி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன் மற்றும் ஜோஸ்;பர், பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக