thoothukudileaks 27-1-2023
photo news by Francis
தூத்துக்குடியில் நம் இந்திய தேசிய கொடி ஏற்றி 74வது குடியரசு தின விழாவை கொண்டாடியது தூத்துக்குடி மாவட்ட பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி கூட்டமைப்பு
இதுபற்றிய செய்தியாவது
74வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தூத்துக்குடி பீச்ரோடு பெல் ஹோட்டல் அருகில் தூத்துக்குடி மாவட்ட பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி கூட்டமைப்பு சார்பில் தேசியகொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி டவுண் டி.எஸ்.பி சத்தியராஜ் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.
பின்பு தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் தென்மண்டல அமைப்பாளரும், தூத்துக்குடி மாவட்ட பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி கூட்டமைப்பு மாவட்ட தலைவருமான பாட்டாளி பிரான்சிஸ் தலைமை தாங்கினார்.
செயலாளர் மார்க் மகேஷ் முன்னிலை வகித்தார்.
40வது வார்டு பனிமயமாதா கோவில் பகுதி மாமன்ற உறுப்பினர் ரிக்டா ஆர்தர் மச்சாது, வ உ சி பேரவை மாநில தலைவர் சைவத்திரு கீதா மாரியப்பன், மாவட்ட துணை தலைவர் சாம்ராஜ், அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மார்க்கின் ராபர்ட், சங்க உறுப்பினர்கள் முத்து மாரியப்பன், , பரத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட பொருளாளர் எஸ்.டி.கணேசன் நன்றி கூறினார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக