🤷🏻♀️
தூத்துக்குடி லீக்ஸ்
22-12-2022
தமிழக அரசு 2023 தைப் பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடிட, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்களாக வழங்கலாம் அல்லது ரொக்கமாக வழங்கி விடலாமா? ஆலோசனை சொல்ல பட்டது இதில் அரிசி குடும்ப அட்டை வைத்திருக்கும் பொது மக்களுக்கு பணம் ருபாய் ஆயிரம் ஆயிரம் கூட்டுறவு வங்கி கணக்கில் செலுத்தப்படும் அங்கேதான் பெற வேண்டும் என தகவல் உலா வந்தது வங்கி கணக்கு இல்லாதவர்கள் ஜீரோ பிரசன்ட் கூட்டுறவு வங்கி அக்கவுண்ட் ஆரம்பிக்க விண்ணப்பம் வழங்கப்படடுவதாவும் உடனே நிரம்பி வங்கி கணக்கு ஆரம்பியுங்கள் என பொதுமக்கள் இடம் சில ஊடகங்கள் பீதியை கிளப்பி விட்டார்கள்
இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு மக்கள் இடம் மகிழ்ச்சி அளிக்கிறது.
இதுபற்றிய செய்தியாவது:-
செய்தி வெளியீடு எண் :2327
2023-ஆம் ஆண்டு தைப் பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடிட, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ.1000/- ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆணை!
2023 ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, வருகிற 2023-ஆம் ஆண்டு தைப் பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி. ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000/- வழங்கிட முடிவு செய்யப்பட்டது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். இதன்மூலம் அரசுக்குச் சுமார் ரூ.2,356.67 கோடி செலவினம் ஏற்படும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வினை 2.1.2023 அன்று சென்னையிலும் அன்றைய தினமே மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர் பெருமக்களும் தொடங்கி வைப்பார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக