thoothukudileaks
news by arunan 22-12-2022
தூத்துக்குடியில் சசிகலா புஷ்பா வீட்டில் மர்ம கும்பல் கல்வீச்சு கார் கண்ணாடி உடைப்பு சம்பவம் தமிழ்நாடு பாஜக வினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சசிகலா புஷ்பா
சசிகலா புஷ்பா முன்பு அதிமுக கட்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயராக இருந்தவர். கட்சி தலைவி ஜெயலலிதா தன்னை கன்னத்தில் ஓங்கி அறைந்து அடித்ததாக குற்றம் சாட்டி நாடாளுமன்ற த்தில் அழுதுபடி நியாயம் கேட்டவர் ?இதனால் ஜெயலலிதா அதிமுக கட்சி விட்டு சசிகலா புஷ்பாவை நீக்கி இவரொடு எந்த அதிமுகவினரும் தொடர் பு வைத்து கொள்ள கூடாது என அதிமுகவை விட்டு ஜெயலலிதா உடனே சசிகலா புஷ்பா வை வெளியேற்றினார்.
அதன் பின்பும் ஏதாவது ஒரு பரபரப்பு இவர் சம்பந்தப்பட்ட து அடிக்கடி வெளிவருவது உண்டு.
தற்போது பாஜகவின் துணைத் தலைவர் சசிகலா புஷ்பா-இருந்து வருகிறார்.
இவரது வீடு தூத்துக்குடி பி அண்ட் டி காலனி பகுதியில் இருக்கிறது அங்கே மர்ம கும்பல்கள் சசிகலா புஷ்பா வீடு புகுந்து அடித்து நொறுக்கப்பட்டதில் அவரது கார் மற்றும் வீடுகளில் உள்ள கண்ணாடிகளும் ஜன்னல்களும் பெரும் சேதம் ஏற்பட்டது.
இந்த தாக்குதல் அறிந்த பாஜக தொண்டர்கள் நிர்வாகிகள் தற்போது சசிகலா புஷ்பா வீட்டு முன்பு நின்று தாக்குதல் நடத்திய ரவுடி கும்பலை கைது செய்யுமாறு கேட்டுக் வருகின்றனர்.
தூத்துக்குடி காவல் துறையினர் விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுபற்றி அப்பகுதியில் விசாரித்ததில் தெரிவித்தாவது
தூத்துக்குடி அபிராமி மஹாலில் தூத்துக்குடி மாவட்டம் பாஜக சார்பில் நேற்று21-12-2022 பாஜக நயினார் நாகேந்திரன் கலந்து கொண்ட கிறிஸ்துமஸ் விழா நலத்திட்ட உதவிகள் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேச ஆரம்பித்த..
சசிகலா புஷ்பா
பாஜக தலைவர் அண்ணா மலை பற்றி சில நாட்கள் முன்பாக விமர்சித்து பேசிய திமுக அமைச்சர் கீதா ஜீவன் குறித்து ஆவேசமாக பேசினார்.
பாஜக தலைவர் அண்ணா மலை பற்றி பேசியதற்கு பதிலடியாக..
நீங்கள் வீட்டில் இருந்து வெளியே வரும் போது கால் இருக்காது, அண்ணாமலை பற்றி பேசும் நாக்கு இருக்காது என்று ஆவேசமாக சாடினார்.
தூத்துக்குடியில் பாஜக தொடர்ந்து அமைச்சர் கீதா ஜீவன் செய்யும் ஊழலை வெளிக் கொண்டு வருவோம். சமூக நலத்துறை அமைச்சராய் இருந்து சமூகத்தை பேணவில்லை.
நாகரிக அரசியல் செய்ய வேண்டும். தெற்கத்தி பெண்களுக்கு அசிங்கத்தை ஏற்படுத்தி வருகிறீர்கள். தூத்துக்குடியில் விரைவில் மாற்றம் வர போகிறது. கீதாஜீவன் அமைச்சராக இருக்கும்போது இங்கு திமுக தோற்க போகிறது.
இதே தூத்துக்குடியில் பாஜக வெற்றி பெற போகிறது என்று தெரிவித்தார்.
சசிகலா புஷ்பாவின் அதிரடி பேச்சினால் திமுகவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது
இந்நிலையில் இன்று தூத்துக்குடியில் உள்ள சசிகலா புஷ்பா வின் வீட்டில் மர்ம கும்பல்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதனால் வீட்டில் உள்ள ஜன்னல்கள், கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. அவரது காரும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த தாக்குதல் சம்பவம் தூத்துக்குடியில் திமுக பாஜக கட்சியினர் மத்தியில் பரபரப்பு
மேலும் அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் தூத்துக்குடி நகர் முழுவதும் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
சசிகலா புஷ்பா வீட்டில் தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் கைது செய்யும் வரை இடத்தை விட்டு நகர மாட்டோம் என்று பாஜக தொண்டர்கள் சசிகலா புஷ்பா வீட்டு முன்பு இருந்து வந்தனர்.
சமீபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் தூத்துக்குடி திமுக அமைச்சர் கீதா ஜீவன்,
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை பற்றி கடுமையான விமர்சித்திருந்தார்
இனி அண்ணா மலை திமுக அமைச்சர்களை பற்றி பொய் பேசுவதை அண்ணாமலை நிறுத்தி கொள்ள வேண்டும் என்றும், இல்லை என்றால் மேடையில் ஏறுவோம் என்று கடுமையாக சீற்றம் காட்டியிருந்தாராம்.






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக