தூத்துக்குடி- கயத்தாறு-தெற்கு இலந்தைகுளம் கல்குவாரி கருத்து கேட்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
தமிழ்நாடு சுற்றுச்சூழல்
பாதுகாப்பு இயக்கம், சட்ட விரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகள் - சமூக செயல்பாட்டில் அக்கறை உள்ள கட்சிகள் கொடுத்த மறுக்க முடியாத ஆதாரங்கள் அடிப்படையில் கல்குவாரி கருத்து கேட்புக் கூட்டத்தை ரத்து செய்தார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ்.
இதுகுறித்து
சட்ட விரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்கம் பத்திரிக்கை செய்தியாவது:-
நாமக்கல்லில் கடந்த 4 ஆண்டுகளாக இல்லாத இயங்காத நிறுவனமான ஒமேகா லேபரட்டீஸ் என்ற ஆய்வுக்கூடத்தில், கல்குவாரி அமைப்பதற்கான காற்று- மண் - நீர் - ஒலி ஆய்வு செய்வதாக கூறி
போலியான ஆவணங்களை கொடுத்து 18-08-2022 இன்று வியாழன் நடத்தப்பட இருந்த ஜாகிர் உசேன் கல்குவாரி கருத்து கேட்டு கூட்டத்தை ரத்து செய்துள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் தற்போது அறிவித்துள்ளார்கள்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அவருக்கு, தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் சட்ட விரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்கம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
நேற்று 17-08-2022 புதன்கிழமை
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வட்டம்,
தெற்கு இளந்தைகுளம்
ஜாகிர் உசேன் கல்குவாரி கருத்து கேட்புக் கூட்டத்தை ரத்து கோரி பல்வேறு ஆதாரங்களுடன் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன்,
சட்ட விரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ந.சண்முகம்
தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க பொறுப்பாளர் குணசீலன்,
தூத்துக்குடி நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் வே.வேல்ராஜ்,
கல்குவாரி எதிர்ப்பு இயக்க செயல்பாட்டாளர் ஸ்ரீவைகுண்டம் முத்துச்செல்வன் உள்ளிட்ட தமிழகம் முழுக்க பலரும் பல்வேறு ஆதாரங்களுடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு வாட்ஸ் அப், மின்னஞ்சல் வழியாக மனு செய்திருந்தோம்.
தூத்துக்குடி
மாவட்ட ஆட்சித் தலைவரையும்,
தூத்துக்குடி
மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அவர்களையும் அலைபேசி வழியாக தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் அழைத்து, ஜாகிர் உசேன் கல்குவாரி கருத்து கேட்புக் கூட்டத்திற்கு கொடுக்கப்பட்ட ஆவணங்கள் எவ்வாறு போலியானவை என தெரிவித்தும் , அதற்கான பல்வேறு ஆதாரங்களையும் கூறி இதை உடனே ரத்து செய்ய கோரி இருந்தோம்.
மேலும் ஆய்வுக்கூடமே இல்லாத இயங்காத ஒமேகா லேபரட்டீஸ் என்ற நிறுவன ஆய்வு முடிவுகளை வைத்து - சேலத்தை சேர்ந்த ஜியோ எக்ஸ்பிளரேஷன் அண்ட் மைனிங் சொல்யூஷன் என்ற நிறுவனம் ஏற்கனவே மோசடியாக செயல்பட்டது பற்றியும், இந்த நிறுவனத்தின் மீது கரூர் மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் கொடுத்து கிரிமினல் நடவடிக்கை எடுக்க கோரி இருந்தது பற்றிய ஆதாரங்களையும், கூட்டங்களை ரத்து செய்யக் கோரியும் கொடுத்த ஆவணங்களை தெரிவித்து இருந்தோம் .
தூத்துக்குடி, சென்னை உட்பட பல்வேறு பத்திரிக்கையாளர்களும் தூத்துக்குடி மாவட்ட
ஆட்சித் தலைவர் உள்ளிட்ட பல்வேறு
அதிகாரிகளை அழைத்து, மோசடியான ஆவணங்களை பற்றி தெரிவித்து விளக்கம் கேட்டனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர், ஆவணங்களின் உண்மை தன்மையை பரிசீலித்து, அதன் அடிப்படையில் கயத்தாறு தெற்கு இலந்தைகுளம் கல்குவாரி கருத்துக் கேப்பு கூட்டத்தை ரத்து செய்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கோரிக்கை வைத்த அடிப்படையில், கருத்து கேட்பு கூட்டத்தை ரத்து செய்ததை வரவேற்பதோடு, சட்ட விரோதமாக மோசடியான ஆவணங்களை கொடுத்த சேலம் ஜியோ எக்ஸ்ப்ளரேஷன் அண்ட் மைனிங் சொல்யூஷன் நிறுவனத்தின் மீதும், கல்குவாரி உரிமையாளர்கள் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
சேலம் ஜியோ எக்ஸ்ப்ளரேஷன் அண்ட் மைனிங் சொல்யூஷன் நிறுவனம், தமிழக முழுக்க இதுபோல் 100-க்கு மேற்பட்ட குவாரிகளுக்கு மோசடியான ஆவணங்களை கொடுத்து, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயாரித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தியதை நாங்களே கடந்த ஆகசுடு -2021 முதல் ஓராண்டு காலமாக கையும் களவுமாக கருத்துக் கேட்புக் கூட்டங்களில்
பிடித்துக் கொடுத்து உள்ளோம்.
தமிழக அரசே!
கருத்து கேட்டுக் கூட்டங்களில் கொடுக்கப்படும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையின் அனைத்து ஆவணங்களையும் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!!
சேலம் ஜியோ எக்ஸ்ப்ளரேஷன் அண்ட் மைனிங் சொல்யூஷன் நிறுவனம், கல்குவாரி மற்றும் கிரானைட் குவாரிகளுக்காக தமிழகம் முழுக்க இதுவரை கொடுத்துள்ள அனைத்து ஆவணங்களின் உண்மை தன்மையை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!!
சேலம் ஜியோ எக்ஸ்ப்ளரேஷன் அண்ட் மைனிங் சொல்யூஷன் நிறுவனம் கொடுத்த ஆவணங்கள் அடிப்படையில், அனுமதி கொடுக்கப்பட்ட அனைத்து கல் குவாரிகளின் செயல்பாட்டை ரத்து செய்ய வேண்டும்!!!
@ இரா.சா.முகிலன், ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம்.
ந.சண்முகம்,
சு.விஜயன்,
ஒருங்கிணைப்பாளர், சட்ட விரோத கல் குவாரி எதிர்ப்பு இயக்கம்
97919-7876
குணசீலன் வேலன், ஒருங்கிணைப்பாளர் தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம்
72006-96746
இவ்வாறு தெரிவித்துள்ளார்கள்.
தூத்துக்குடி லீக்ஸ்
பதிவு 18-08-2022

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக