தூத்துக்குடி லீக்ஸ்: 14.07.2022
குலசேகரப்பட்டினம் பகுதியில் ரூபாய் 10 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் 3 நாட்கள் தூங்காமல் அயராது உழைத்து கொள்ளையடித்தவர்களை கண்டுபிடித்து 5 எதிரிகளை கைது செய்து கொள்ளையடித்த பணத்தை மீட்ட தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு தமிழக வணிகர் சங்கங்களின் பாதுகாப்பு பேரவை பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.
இது பற்றிய செய்தியாவது:-
கடந்த 04.07.2022 அன்று குலசேகரப்பட்டினம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் பீர்முகமது என்பவருக்கு சொந்தமான டாட்டா ஏஸ் என்ற வாகனத்தை நம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்து வழிமறித்து ரூபாய் 10 லட்சத்தை கொள்ளையடித்து சென்றார்கள்.
இவ் வழக்கில் காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு இரவு, பகல் பாராமல் அயராது உழைத்து கொள்ளையடித்தவர்களை கண்டுபிடித்து 5 எதிரிகளை அதிரடியாக கைது செய்து கொள்ளையடித்துச் சென்ற பணம் ரூபாய் 9,36,000/-ம் பணத்தை மீட்டுள்ளனர்.
காவல்துறையினரின் இந்த செயலை பாராட்டி தமிழக வணிகர் சங்கங்களின் பாதுகாப்பு பேரவை சார்பாக அதன் தலைவர் சௌந்தர்ராஜன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன் அவருக்கு பாராட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.
![]() |
| வணிகர்கள் காவல் துறையை பாராட்டு கடிதம் |
அந்த பாராட்டு கடிதத்தில் மேற்படி கொள்ளை சம்பவம் தொடர்பாக குலசேகரப்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் செய்தவுடன் துரிதமாக செயல்பட்டு காவல் துணை கண்காணிப்பாளர் ஆவுடையப்பன், குலசேகரப்பட்டினம் காவல் ஆய்வாளர் ரெகுராஜன், உதவி ஆய்வாளர் ராஜபிரபு, சிறப்பு உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், தலைமை காவலர்கள் ராஜ்குமார், இசக்கியப்பன், சொர்ணராஜ், முதல் நிலை காவலர் கார்த்திகேயன், காவலர்கள் டேவிட்ராஜன், சண்முகையா, சக்தி மாரிமுத்து, சுடலைமணி மற்றும் கதிரேசன் ஆகியோர் 3 நாட்களாக தூங்காமல் குற்றவாளிகளை பிடித்து கொள்ளையடித்த பணத்தை மீட்டுள்ளனர்.
காவல்துறையினரின் துரிதமான சிறப்பான செயல்பாட்டால்தான் இந்த பணத்தை கைப்பற்ற முடிந்தது.
ஆகவே உங்கள் கீழ் பணிபுரியும் காவல்துறையினருக்கும், உங்களுக்கும் தமிழக வணிகர் சங்கங்களின் பாதுகாப்பு பேரவை சார்பாக நெஞ்சார்ந்த நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம், எனவும், காவல்துறையினருடன் வணிகர்கள் ஒற்றுமையாக செயல்பட்டு, குற்றங்கள் குறைய பாடுபடுவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்குறிப்பிடுகையில்.....
தமிழக வணிகர் சங்கங்களின் பாதுகாப்பு பேரவையின் பாராட்டுக் கடிதம் காவல்துறையினருக்கு பெரும் ஊக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது, ஆகவே அதற்காக தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் சார்பாக என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும், தூத்துக்குடி மாவட்டத்தில் குற்ற செயல்கள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் எவ்வித பாரபட்சமுமின்றி சட்டப்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குற்றங்கள் இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்குவதே எங்களின் தலையாய கடமை என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக