திங்கள், 13 ஜூன், 2022

பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த தூத்துக்குடி அமைச்சர் உதவியாளர் !!!

 தங்களது வீட்டில் திருடிய நபர்கள் மீது புகார் அளித்தோம் மேற்குரிய நபர்களுக்கு ஆதரவாக தூத்துக்குடி அமைச்சரின் பி.ஏ கிருபா காவல்துறை புகாரை வாபஸ் வாங்க சொல்லி என்னையும் எனது குடும்பத்தாரையும்  மிரட்டி வருகிறார்.இதுவரை காவல்துறை புகார் கொடுத்தவர் களை கைது செய்யாமல் தடுத்து வருகிறார் கள் 

இதுபற்றி இன்று (13-06-2022)தூத்துக்குடி மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் இடம் சாந்தா நேரில் வந்து புகார் மனு அளித்தார்.



இதுபற்றி புகார் மனுவில் தெரிவித்தாவது:-

அனுப்புநர்
பா.சாந்தா (வயது 54/22)
சு/பெ.பாஸ்கரன்
69, நாசரேத் ரோடு
ஆழ்வார்திருநகரி-628 612
ஏரல் தாலுகா
தூத்துக்குடி மாவட்டம்
செல்: 9486553267
பெறுநர்
உயர்திரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்
தூத்துக்குடி
மதிப்பிற்குரிய ஐயா,
நான் மேலே கண்ட முகவரியில் குடும்பத்துடன் குடியிருந்து
வருகிறேன். 


எனக்கு ஆழ்வார்திருநகரி கிராமம் சர்வே எண்.882/2 உள்ள இடமானது எனக்கு பாத்தியப்பட்டதாக இருந்து வருகிறது. 


மேற்படி இடத்தில்
ராமச்சந்திரன் மகன் ஜானகிராமன் என்பவர் இடம் சம்பந்தமாக என்னிடம்
தகராறு செய்து வருகிறார். இதுசம்பந்தமாக ஆழ்வார்திருநகரி காவல்
நிலையத்தில் 23-04-2022ல் ஒரு புகார்மனு அளித்தேன். மேற்படி புகார்
மனுவின் ஏற்பு எண்.173/2022 பதிவாகி உள்ளது. மேற்படி புகாரினை உதவி
ஆய்வாளர் அவர்கள் விசாரித்து எதிர்தரப்பினரை எச்சரித்து அனுப்பினர்.



இந்நிலையில் கடந்த 07-06-2022ல் அதிகாலை சுமார் 3 மணியளவில் மேற்படி
இடத்தை சேதப்படுத்தி
கதவுகளை அடித்து உடைத்து அங்கு
வைக்கப்பட்டிருந்த பழைய மோட்டார்,ஸ்கிராப், அலுமினியம், மற்றும் பித்தளை
போன்ற சாமான்களை திருடி சென்றுள்ளனர். 


இந்த சம்பவங்கள் அனைத்தும்
ஜானகிராமன் மனைவி ஆனந்தி தலைமையில் அரங்கேறியுள்ளது. இதற்கு
உறுதுணையாக இருந்து செயல்பட்டது ஜானகிராமன், ஜானகிராமனின் மூத்த
மகன் மற்றும் ஜானகிராமன் கடையில் வாடகைக்கு இருக்கும் கதிர்வேல்
மகன் சண்முகநாதன் (எ) ஆனந்த் மற்றும் அடையாளம் தெரியாத நான்கு
நபர்கள் இந்த குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். 


இந்த சம்பவம் எனக்கு
அன்று அதிகாலை 5.30 மணியளவில் தெரியவந்து காவல் நிலையத்திற்கு
புகார் கொடுக்க சென்றும் எனது புகாரை ஏற்க மறுத்து நான் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவில் உள்ள பதிவுகளை கைபற்றி மீண்டும் புகார்
அளித்த பின்பு ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் முதல் தகவல்
அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
 


குற்ற எண்.66/2022 நாள் 08.06.2022 ஆகும்.

இந்நிலையில் இன்றைய தேதிவரை மேற்படி எதிரிகள் யாரையும் காவல்

.அதிகாரிகள் கைது செய்யாததினால் எனது கடையில் வந்து மேற்படி எதிரிகள்
அவ்வப்போது பிரச்சனை செய்தும் தகராறு செய்தும் வருகின்றனர்.
அடைக்கலாபுரத்தை சேர்ந்த கிருபா என்பவர் நான் அமைச்சர் அனிதா
ஆர்.ராதாகிருஷ்ணன் உதவியாளர் என கூறி மேற்படி புகாரினை வாபஸ்
பெற சொல்லி என்னையும் எனது குடும்பத்தினரையும் மிரட்டல் விடுத்து
வருகிறார் மற்றும் மேற்படி புகாரில் உள்ள எதிரிகளை கைதுசெய்யவிடாமல்
காவல்துறை அதிகாரிகளுக்கு
இடையூறு செய்து வருகிறார்.



என் கணவர் மற்றும் குழந்தைகள்
அதுமட்டுமல்லாமல் ஜானகிராமன் உடன்பிறந்த தம்பி நேருஜி என்பவர்
மதுபோதையில் என்னிடம் வந்து நீ எப்படி என் அண்ணன் மீது புகார்.
அளிக்கலாம் ஒழுங்காக புகாரை வாபஸ் பெறவில்லை என்றால் உன்னையும்,
உன் குடும்பத்தினரையும் தீவைத்து வீட்டோடு கொழுத்திவிடுவேன் என்று
அவ்வப்போது வந்து மிரட்டி வருகிறார்.
வேலைக்கு செல்வதால் நான் வீட்டில் தனியாக இருந்து வருகிறேன்.
இதனால் எனக்கு மிகுந்த மனவேதனையும், உயிருக்கு அச்சுறுத்தலும்
விடுத்துவரும் ஜானகிராமன் மற்றும் அவரது தம்பி நேருஜி ஆகியோரிடம்
இருந்து பாதுகாப்பு தரும்படியும் மேற்படி முதல் தகவல் அறிக்கையில் கண்ட
எதிரிகளை கைது செய்து எனக்கும் எனது குடும்பத்திற்கு பாதுகாப்பு
உறுதிசெய்திடவும், மேற்படி எனக்கு சொந்தமான இடத்தில் நான் கட்டிடம்
கட்டுவதற்கு எந்த இடையூறும் இல்லாமல் தாங்கள் பாதுகாப்பு அளிக்குமாறு
பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நாள்: 13-06-2022
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
B.Shantha
இணைப்பு:-
1)
ஆழ்வார்திருநகரி காவல் நிலைய மனு ரசீது எண்.173/2022.
மேற்படி இடம் எனக்கு பாத்தியப்பட்டதற்கான பத்திரம் மற்றும்
பட்டா ஜெராக்ஸ்.
3) குற்ற எண்.66/2022-க்கு கொடுக்கப்பட்ட கண்காணிப்பு கேமரா
பதிவு பென்ட்டிரைவ்

இவ்வாறு தெரிவித்துள்ளார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக