முன்னாள் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி யின் 99 -வது பிறந்த நாள் ஜூன் 3 இன்று தமிழகம் முழவதும் திமுக கட்சி தொண்டர்கள் தங்கள் பகுதியில் கேக் மற்றும் இனிப்பு லட்டு பொது மக்களுக்கு வழங்கி கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி மாவட்டங்களில் இன்று சில திமுக அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் வேட்டி சேலை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றனர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பாக தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பாக காலை 10 மணி அளவில் கலைஞரின் 99 ஆவது பிறந்த நாள் சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் பிறந்தநாள் கேக் வெட்டி இனிப்பு வழங்கினர்.. போல்பேட்டை பகுதியில் பிறந்த நாளையொட்டி தூய்மை பணியாளர்களுக்கு இனிப்பு லட்டு மற்றும் சேலை வழங்கினர்.
திருச்செந்தூரில் தூத்துக்குடிதெற்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளரும் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் கலைஞர் பிறந்த நாள் .பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு லட்டு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஒட்டப்பிடாரம் சண்முகய்யா எம்.எல்.ஏ தலைமையில் தூத்துக்குடி இந்திரா நகர் பகுதியில் கலைஞர் பிறந்த நாள் கொண்டாடினர். இதையொட்டி அப்பகுதியில் பெண்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டது.






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக