புதன், 29 ஜூன், 2022

மழை வெள்ளம் - கொரானா நிவாரணம் - தெருவிளக்கு குறித்து தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் வரவேற்பு தீர்மானம்

தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மாநகராட்சிஆனையர் சாரு ஸ்ரீ முன்னிலையில் இன்று 29-06-2022நடைபெற்ற கூட்டத்தில் தூத்துக்குடி வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டார்கள்.




இன்று நடைபெற்ற கூட்டத்தில் 1 6- தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. 

அதில் முக்கியமாக  அனைவராலும் சிறப்பு வரவேற்பு பெற்ற தீர்மானம் 

மழை வெள்ளம்

தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட சங்கரப்பேரி, பண்டாரம்பட்டி, மீளவிட்டான், தூத்துக்குடி

ரூரல் மற்றும் முத்தையாபுரம் போன்ற பகுதிகள் கடந்த 2015ம் ஆண்டைய வடகிழக்கு பருவமழையின் போது ஏற்பட்ட பெரும் வெள்ளத்தினால் மழைநீர் சூழ்ந்து பாதிப்புக்குள்ளாகியது.

மேற்படி சூழ்நிலை இனி வருங்காலங்களில் ஏற்படாமல் தடுக்கும் வண்ணம், மழைநீர்

வடிகால் அமைத்து மழை வெள்ளத்தினை தவிர்க்கும் வண்ணம் திட்ட வரைவு தயார்

செய்யப்பட்டு மழைநீர் வடிகால் அமைக்கும் பணியானது நான்கு தொகுதியாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது .

இதில் முதல்கட்ட பணியானது தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி திட்டம் மற்றும் சீர்மிகு

நகர திட்டத்தின் கீழ் ரூ.175.68 கோடி மதிப்பீட்டில் 22.68 கி.மீ நீளத்திற்கும், இரண்டாம் கட்டமற்றும் மூன்றாம் கட்ட பணிகள் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூ.122.86 கோடி மதிப்பீட்டில்

63.89 நீளத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

நான்காவது கட்ட பணிகளுக்கான திட்ட வரைவு ரூ.690.69 கோடி மதிப்பீட்டில்

289.00 கி.மீ நீளத்திற்கு அமைக்க தயார் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2015 மற்றும் 2020 ஆண்டுகளில் தூத்துக்குடி மாநகராட்சியுடன்

இணைக்கப்பட்ட, முத்தம்மாள் காலனி, ஆதிபராசக்தி நகர், தனசேகர் நகர், ரகமத் நகர்,

அய்யாச்சாமி காலனி, பொன்சுப்யைா நகர், லுர்தம்மாள்புரம், மற்றும் செயிண்ட் மேரிஸ் காலனி

ஆகிய பகுதிகளில் அதிகளவில் வெள்ள நீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு  ஏற்பட்டுள்ளது.

மேற்படி சூழ்நிலை இனிவருங்களில் ஏற்படாமல் தடுக்கும் வண்ணம்

ஆசிய மேம்பாட்டு வங்கி நிதி உதவியுடன் மேற்படி பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தொகுதி 4ல் முதற்கட்டமாக நான்கு சிப்பங்களாக ரூ. 82.98 கோடி மதிப்பீட்டில் 36.36 கி.மீ

நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்க கீழ்க்கண்ட விபரப்படி மதிப்பீடு தயார்

செய்யப்பட்டுள்ளது.

கொரானா நிவாராண நிதி வழங்குதல்

கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாண்புமிகு

முதலமைச்சர்  அறிவித்துள்ள நிவாரணநிதி வழங்குவதற்கு ஏதுவாக வறுமை

கோட்டுப்பட்டியலில் இடம் பெறாதவர்களின் விவரங்களை வறுமை கோட்டிப்பட்டியலில்

இணைத்திடவும்

சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையினரால்

வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண்: G.O.(Ms) No:24, நாள்: 11.06.2021 படி கொரோனா

தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ரூபாய் 5

இலட்சமும், பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு ரூபாய் 3 இலட்சமும்,

உறவினரின் பாதுகாப்பில் வளரும் குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூபாய்.3000/- என்ற

வீதம் மேற்படி குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தியாகும் வரையிலும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து

கீழ்க்கண்டவாறு பயனாளிகள் பட்டியல் வரப்பெற்றுள்ளது. அனுமதியளிக்கிறது

-தெருவிளக்குகள் இனி தனியார் பாரமரிப்பு

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டு பகுதிகளிலும் மொத்தம் 17533 எண்ணிக்கை

பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

தெருவிளக்குகளில் 90% தெருவிளக்குகள் தற்காலிக பணியாளர்களைகொண்டு

மாநகராட்சியாலும், 10% தெருவிளக்குகள் தனியார் நிறுவனம் மூலமும் பராமரிக்கப்பட்டு

வரப்படுகிறது. இந்நிலையில் கடந்த காலங்களில் மாநகரில் பெய்த வரலாறு காணாத மிக அதிகனமழையால் தெருவிளக்குகள் எரியாமை புகார்கள் அதிகளவில் வரப்பெற்று நகர் வாழ்வாதார மையம் (CLC) மூலம் பெறப்பட்ட தற்காலிக பணியாளர்களைக் கொண்டு உடனுக்குடன் சரிசெய்ய இயலாத சிரமமான சூழ்நிலை ஏற்பட்டது.

மேலும் அன்றாடம் தெருவிளக்கு மின்விநியோக தடங்களில் ஏற்படும் பழுதுகள் மற்றும் புகார்களை உடனுக்குடன் சரிசெய்வதிலும் மிகுந்த சிரமங்கள் ஏற்பட்டு வருகிறது.

இதனைத்தொடர்ந்து தெருவிளக்குகளை ஒப்பந்தப்புள்ளி கோரி தனியார் மூலம் இயக்கி பராமரிக்கும் பணிகளை மேற்கொள்ள நகராட்சி நிர்வாக இயக்குநர் சென்னை அவர்களின் அனுமதிக்கு அனுப்பபட்டு அனுமதி கிடைக்கப்பெறாத நிலையிலேயே இருந்தும்

வருகிறது. இதனால் தற்போதுள்ள தற்காலிக பணியாளர்களைக் கொண்டு ஒட்டுமொத்த LED

தெரு விளக்குகளையும் பராமரிப்பதில் ஏற்படும் சிரமங்களை களைந்து சீரான முறையில் O&M

பணியினை செயல்படுத்த வேண்டியதன் அவசர அவசியம் கருதி சென்னை, நகராட்சி நிர்வாக

இயக்குநரக 2022–2023ம் நிதியாண்டில் அனுமதிக்கப்பட்ட விலைவிகிதங்களின்படி மதிப்பீடு

ரூ.21.70 இலட்சத்திற்கு தயார் செய்து ஒப்பந்தபுள்ளிகள் கோரி ஒட்டுமொத்த LED

7U

தெருவிளக்குகளையும் தனியார் மூலம் அடுத்த மூன்று மாதகாலத்திற்கு அல்லது மறு உத்திரவு கிடைக்கப்பெறும் காலம் வரையில் இயக்கி பராமரிப்பு செய்திட மாமன்றத்தின் அனுமதி வேண்டப்பட்டது. பொது மக்களின் நலன் கருதி மாநகராட்சி பொது நிதியிலிருந்து செயல்படுத்த படுகிறது. 

தூத்துக்குடி புது பஸ் ஸாடாண்ட் டில் காலியாக உள்ள 7கடைகள்வாடகைவிடுதல்

அடுத்து தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் காலியாக உள்ள கடைகளின் ஏலம் விவரம் கோரியவர்களுக்குவாடகை விடப்படுகிறது.


இவ்வாறு தூத்துக்குடி மாநகராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக