தமிழகம் முழுவதும்சொத்துவரி உயர்வுக்கு காரணமான திமுக அரசை கண்டித்து இன்று அதிமுக வினர்ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஏப்ரல் 5ஆம் தேதி காலை 10.00 மணிக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில்
சொத்து வரியை வரலாறு காணாத வகையில் 150 சதவீதம் உயர்த்தி மக்களை வாட்டி வதைத்திடும்
திமுக அரசை கண்டித்தும், சொத்து வரி உயர்வை உடனே திரும்பப் பெற வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே உள்ள திடலில் வைத்து நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அதிமுக தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள் ஏராளமான பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக