தூத்துக்குடி மாவட்ட மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் 02.04.2022 மாலை 7 மணிக்கு தலைவர் நெய்தல் அண்டோ அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
பேராசிரியை பாத்திமா பாபு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
01. மதுரையில் மார்ச் 26 மற்றும் 27 தேதிகளில் மிகச்சிறப்பாக மாநில மாநாடு நடத்திய மதுரை மாவட்ட நிர்வாகிகளுக்கும் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்த உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து தீர்மானம் இயற்றப்பட்டது.
02. தூத்துக்குடி மாவட்ட மக்கள் சிவில் உரிமை கழகத்திற்கு புதிதாக அதிக உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும் என்றும் அதில் அதிக அளவு இளைஞர்களையும் பெண்களையும் சேர்த்திட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
03.தூத்துக்குடி நகரத்தில் வாழ்ந்த பத்துக்கும் மேற்பட்ட மறக்கப்பட்ட தியாகிகளை ஆவனப்படுத்தியும் குறுங்காணொலி பேசியதற்கும் நமது மாவட்ட தலைவர் நெய்தல் அண்டோ வாழ்த்து தெரிவித்து கெளரவிக்கப்பட்டார்.
04. தூத்துக்குடி மாவட்ட மக்கள் சிவில் உரிமை கழகத்தின் 31 3 2022 வரையான வரவு செலவு கணக்குகள் வாசித்து சரிபார்க்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது.
05. மாநில மாநாடு நடத்த நன்கொடை அளித்தவர்களுக்கும், வசூலித்தவர்களுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் இயற்றப்பட்டது.
06. தேசிய கவுன்சில் உறுப்பினராக தூத்துக்குடி சார்பில் பேராசிரியை பாத்திமா பாபு அவர்களை ( மாநிலக் குழு கொடுத்த வாக்குறுதியின் படி) நியமனம் செய்ய வேண்டும் என்று
ஒரு மனதாகக் கேட்டுக்கொள்ளப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது
07.நாட்டின் சுற்றுச்சூழல் சட்டங்கள் அனைத்தையும் ஒருபோதும் மதிக்காமல் அத்துமீறி தன்சுயலாபத்திற்காக தூத்துக்குடி சுற்றுச்சூழலை சீர்குலைத்த நச்சுத்தன்மை கொண்ட ஸ்டெர்லைட் ஆலையை எந்த சூழலிலும் மீண்டும் இயக்க அரசு அனுமதிக்கக் கூடாது என்று மாநில அரசு மற்றும் ஒன்றிய அரசை வலியுறுத்தி தீர்மானம் இயற்றப்பட்டது.
08.தமிழக அரசு ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெறுவோம் என்று கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிட வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் இயற்றப்பட்டது.
09.மீனவர்களையும் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்க நினைக்கும் புதிய மீன்வள மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திட தீர்மானிக்கப்பட்டது.
10. பெருந்தொற்று கொரானா நோயால் பொதுமக்கள் அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தற்போது வரை அதிலிருந்து மீளாத நிலையில் சொத்து வரியை பன்மடங்கு உயர்த்தி மக்களை பெரிதும் பாதிப்படைய செய்யும் கூடுதல் வரிவிதிப்பை
தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
11. வருங்காலங்களில் நடக்கும் தேர்தலில் ( EVM ) மின்னணு வாக்குப்பதிவு முறையை மாற்றி பழைய முறையான வாக்குச்சீட்டு பயன்படுத்தும் முறையை பின்பற்ற வேண்டும் என்று இக்கூட்டத்தின் மூலமாக வலியுறுத்தி தீர்மானம் இயற்றப்பட்டது.
12. தரமற்ற நான்கு வழி சாலை, அடிப்படை பராமரிப்பு இல்லாத சாலை, நிறைவு பெறாத பாலம் ( தூத்துக்குடி சிப்காட் வளாக ரயில் பாலம் ), திரும்ப திரும்ப பழுது ஏற்படும் வல்லநாடு பாலம் அனைத்தினையும் வைத்துக்கொண்டு தூத்துக்குடியின் இருபுறமும் சுங்கச்சாவடி வசூல் செய்வதை கண்டித்து போராட்டம் நடத்திட தீர்மானம் இயற்றப்பட்டது.
பொதுக்குழுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் மாவட்ட பொருளாளர் நவமணி நன்றி கூறினார். கூட்டத்தில் பெரும்பாலான மக்கள் சிவில் உரிமைக் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
சொ.ராஜா B.A.,L L B.,
மாவட்ட செயலாளர்
மக்கள் சிவில் உரிமை கழகம்
தூத்துக்குடி மாவட்டம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக