புதன், 2 மார்ச், 2022

போதைப்பொருள் முழுமையாக ஒழிக்கப்படும் தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக பதவியேற்ற காவல்துறை கண்காணிப்பாளர்டாக்டர்பாலாஜி சரவணன் ஐபிஎஸ் பேட்டி

 தூத்துக்குடி லீக்ஸ்

சென்னை பெருநகர காவல் துணை ஆணையராக பணியாற்றி வந்த டாக்டர்பாலாஜி சரவணன் ஐபிஎஸ் (02.03.2022) அன்று  தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக்கொண்டார்.



பொறுப்பேற்றுக்கொண்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது:-

 தூத்துக்குடி மாவட்டத்தில் எவ்வித பாரபட்சமுமின்றி சட்டம் ஒழுங்கு முழுமையாக பராமரிக்கப்படும்,


மாவட்டம் முழுவதும் அனைத்து சமுதாய உறுப்பினர்களுடன் காவல்துறையினர் நல்லுறவு வைத்துக்கொள்வதில் கவனம் செலுத்தப்பட்டு சமுதாயத்தில் உள்ள பிரச்சனைகளை அறிந்து தீர்த்து வைப்பதற்கான சிறந்த சமுதாயக் காவல் பணி மேற்கொள்ளப்படும்.


சமூகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்களை தடுப்பதில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


கஞ்சா, குட்கா போன்ற போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனை போன்றவற்றில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் எவ்வித பாரபட்சமுமின்றி சட்டப்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டு போதைப்பொருள் முழுமையாக ஒழிக்கப்படும். 



அதே போன்று ரடிவுகள் முழுமையாக ஒழிக்கப்பட்டு, சமூக அமைதி பாதுகாக்கப்படும்.

 காவல்துறை பொதுமக்களின் நண்பர்கள் என்பதை உறுதிபடுத்தும் வகையில் காவல்துறையின் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக