தூத்துக்குடி லீக்ஸ்.:14.02.2022
நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இது பற்றிய செய்தியாவது
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் கோவில்பட்டி, திருச்செந்தூர் மற்றும் காயல்பட்டினம் ஆகிய 3 நகராட்சிகள் மற்றும் 17 டவுன் பஞ்சாயத்துக்களில் வரும் 19.02.2022 அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இத்தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று (14.02.2022) தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராஜ் மஹாலில் வைத்து தூத்துக்குடி நகர மற்றும் ஊரக உட்கோட்ட காவல்துறையினருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், தேர்தலை முன்னிட்டு மாவட்டத்தில் இதுவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 261 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டும், 35 ரவுடிகள் கைது செய்யப்பட்டும், 23 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில்சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பொதுமக்கள் எந்த அச்சமும் இன்றி வாக்களிப்பதற்கும், அமைதியாக தேர்தலை நடத்துவதற்கும் ஏதுவாக மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 170 பதற்றமான வாக்குசாவடி பகுதிகளில் கூடுதலாக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபடுவார்கள்.
மேலும் அரசியல் கட்சியினர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடித்து மாவட்ட நிர்வாகத்திற்கும் காவல்துறைக்கும் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளார்.
இதனையடுத்து தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பணிகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் காவல்துறையினருக்கு அறிவுரைகள் வழங்கினார்.
மேலும் இத்தேர்தல் பாதுகாப்பு பணியில் 3 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் 13 காவல் துணை கண்காணிப்பாளர்கள் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உட்பட காவல்துறையினர் மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் 2500 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என மாவட்;ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயராஜ், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சம்பத், பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர் பவித்ரா, காவல் ஆய்வாளர்கள் தென்பாகம் ஆனந்தராஜன், மத்தியபாகம் ஜெயபிரகாஷ், வடபாகம் ரபி சுஜீன் ஜோஸ், புதுக்கோட்டை ரமேஷ், முறப்பநாடு பாஸ்கரன், சிப்காட் சண்முகம் மற்றும் தூத்துக்குடி நகர மற்றும் ஊரக உட்கோட்ட காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக