தூத்துக்குடி மாவட்டம் :02.02.2022
கடந்த 05.07.2021 அன்று ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளான செவல்குளம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த ஆனந்தராஜ் (49), த/பெ. அந்தோணிமுத்து. பச்சைபெருமாள்புரம், ஓட்டப்பிடாரம் என்பவரை மர்மநபர்கள் வழிமறித்து தாக்கி, அவரிடமிருந்த செல்போன், TN 63 AW 5635 (Honda Trigger) என்னும் இருசக்கர வாகனம் மற்றும் ரூபாய் 11,000/- பணம் ஆகியவற்றை வழிப்பறி செய்து தப்பிசென்றுள்ளனர்.
அதேபோன்று அன்றைய தினமே கக்கராம்பட்டி விலக்கு பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த மோகன்ராஜ் (32), த/பெ. முருகன், பாஞ்சாலங்குறிச்சி என்பவரை மர்மநபர்கள் வழிமறித்து அவரிடமிருந்த ரூபாய் 8,000/- மதிப்புள்ள செல்போனை பறித்துவிட்டு தப்பிசென்றுள்ளனர்.
மேலும் அன்றே வாலசமுத்திரம் அருகில் வந்துகொண்டிருந்த ஜெகன் (29), த/பெ. கருப்பசாமி, முதுகுளத்தூர், ராமநாதபுரம் என்பவர் ஓட்டி வந்த லாரியை மர்மநபர்கள் வழிமறித்து அவரிடமிருந்து செல்போன், ஆதார்கார்டு, ஓட்டுநர் உரிமம் மற்றும் ரூபாய் 1,000/- பணத்தையும் பறித்துவிட்டு தப்பிசென்றுள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்ட்டவர்கள் அளித்த புகாரின்பேரில் ஓட்டப்பிடாரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எதிரிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்குமாறு மணியாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர் மேற்பார்வையில் ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர் முத்துராமன், உதவி ஆய்வாளர் முத்துராஜா, சிறப்பு உதவி ஆய்வாளர் பொன்முனியசாமி, முதல் நிலை காவலர் பிரபாகரன் மற்றும் காவலர் விடுதலை பாரதிகண்ணன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து உத்தரவிட்டுள்ளார்.
தனிப்படையினர் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து. தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டதில், கோவில்பட்டி பாரதிநகரை சேர்ந்தவர்களான 1) சூர்யா (21), த/பெ. முருகன், 2) ஆதிகேசவன் (20), த/பெ. முருகன், 3) சாந்தகுமார் (21), த/பெ. ஆறுமுகவேல், 4) துரை செண்பகராஜ் (20), த/பெ. இருளப்பன், 5) விக்னேஷ்வரன் (24), த/பெ. தங்கராஜ், மந்திதோப்பு, கோவில்பட்டி மற்றும் சிலர் சேர்ந்து மேற்படி தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து மேற்படி தனிப்படை போலீசார் எதிரிகள் சூர்யா, ஆதிகேசவன், சாந்தகுமார், துரை செண்பகராஜ் மற்றும் விக்னேஷ்வரன் ஆகிய 5 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து கொள்ளையடிக்க பயன்படுத்திய 2 இருசக்கர வாகனங்கள் உட்பட மொத்தம் 3 இருசக்கர வாகனங்கள், 2 செல்போன்கள் மற்றும் ரூபாய் 10,000/- பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுகுறித்து ஓட்டப்பிடாரம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக