திங்கள், 17 ஜனவரி, 2022

குரும்பூர் வியாபாரி கைது பரபரப்பு வீட்டின் பின்புறத்தில் பண்டல் பண்டலாக வியாபாரத்திற்கு கணேஷ் புகையிலை மதுபாட்டில்கள் பதுங்கல்

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட  பகுதியில் சட்டவிரோதமாக விற்பனை வியாபாரத்திற்காக பண்டல் பண்டலாக கணேஷ் புகையிலை பொருள்கள் மற்றும் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.



ரூபாய். 28,500/- மதிப்புள்ள 65 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் 427 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

இதுபற்றிய செய்தியாவது:-


தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, மதுபாட்டில்கள், புகையிலைப் பொருட்கள், லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர்கள் மற்றும் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபவர்கள் உட்பட சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவர்கள் குறித்து தீவிர ரோந்துப்பணியை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க அனைத்து காவல்துறை உதவி கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள், காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  உத்தரவிட்டுள்ளார்.

 

குரும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) ராமகிருஷ்ணன் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் ஆறுமுக நயினார், தலைமை காவலர் பாலசுப்பிரமணியன், முதல் நிலை காவலர் ஆனந்த கணேஷ் மற்றும் குரும்பூர் காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலை காவலர் சந்தோஷ் ஆகிய போலீசார் நேற்று (16.01.2022) குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அருளானந்தபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்கள்.


 அப்போது,  ஸ்ரீநாத் துரை (எ) சின்னத்துரை (44), த/பெ. செல்லதுரை, அருளானந்தபுரம், குரும்பூர் என்பவர் தனது வீட்டின் பின்புறம் சட்டவிரோதமாக விற்பனைக்காக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்து திடுக்கிட்டு போனார்கள்.




உடனே குரும்பூர் காவல் நிலைய போலீசார்  மேற்படி எதிரி ஸ்ரீநாத் துரை (எ) சின்னத்துரை என்பவரை கைது செய்து அவரிடமிருந்த ரூபாய் 28,500/- மதிப்புள்ள 65 கிலோ புகையிலைப் பொருட்கள் மற்றும் 427 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்து போலீசார் வழக்குபதிவு  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து குரும்பூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக