தூத்துக்குடி லீக்ஸ் 03.01.2022
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி கொம்புதுறை பகுதியில் தேவாலய திருவிழா நடைபெற்றது.
அப்போது பிற மதத்தினரை புண்படுத்தும் வகையில் பர்தா அணிந்து வந்த 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தேவையற்ற வதந்திகளை சமூக வலைதளங்களில் பரப்புவோர் மற்றும் ஜாதி மத ரீதியாக சமூக விரோத செயல்களில் ஈடுபவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுபற்றிய செய்தியாவது:-
திருச்செந்தூர் அருகே உள்ள கொம்புத்துறை பகுதியிலுள்ள தேவாலயத்தில் 02-01 2022 அன்று திருவிழா நடைபெற்றது.
அப்போது ஆலய கொடிமரம் அருகில் பெண்கள் அணியக்கூடிய பர்தாவை அணிந்து கொண்டு 6 பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தார்கள்.
இது குறித்து புகார் வந்ததையடுத்து ஆறுமுகநேரி காவல் நிலைய போலீசார் சம்பந்தப்பட்ட 6 பேர்களை சுற்றி வளைத்து பிடித்தார்கள். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் தேவையற்ற வதந்திகளை பரப்புபவர்கள் மற்றும் சாதி மத ரீதியாக பிரச்சனை ஏற்படும் வகையிலோ அல்லது பொது அமைதிக்கு பங்கம் விளைக்கும் வகையிலோ சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக